இணையத்தில் வைரலாகும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் சங்கீத சாகசம்

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் சங்கீத சாகசம்

இந்த சம்பவம் கடந்து ஒரு வாரம் ஆன நிலையில் தற்போது வரை இணையத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

 • Share this:
  கடந்த வாரம் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய வீடியோ இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  ஒரு தனியார் தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணா, ஏ.ஆர். ரஹ்மான் என்பவர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம், ஆனால் அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும், பாரத ரத்னா போன்ற விருதுகள் என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம் என்றும் கூறினார். மேலும் எந்தவொரு உயரிய விருதும் தன்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது, என்றும் பாலகிருஷ்ணா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதோடு, பாலகிருஷ்ணாவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்களும் எழுந்தது. தற்போது இந்த சம்பவம் கடந்து ஒரு வாரம் ஆன நிலையில் தற்போது வரை இணையத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர். அவர் இதற்கு முன்னர் மேடையில் பாடிய பாடலை தோண்டி எடுத்து தற்போது அதனை விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

           இதற்கு முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா மேடையில் பாடிய வீடியோ பலரின் நகைப்பிற்குள்ளாகி வைரலானது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: