நமோ நாராயண சுவாமியிடம் ஆசி பெற்ற ரஜினிகாந்த் -வைரலாகும் புகைப்படம்

நமோ நாராயண சுவாமியிடம் ஆசி பெற்ற ரஜினிகாந்த் -வைரலாகும் புகைப்படம்

ரஜினிகாந்த்

ரஜினி இல்லத்திற்கு நமோ நாராயண சுவாமிகள் இன்று வருகைத் தந்தார். அவரிடம் ரஜினிகாந்த் ஆசி பெற்றுக் கொண்டார்.

 • Share this:
  ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்குவேன் என்று டிசம்பர் 3-ம் தேதி அறிவித்த ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ பட ஷூட்டிங்குக்கு ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பில் இருந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் தொற்று இல்லை என்பது உறுதியானது. இருந்தாலும் அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்றார் ரஜினிகாந்த்.

  அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழு, “ஒரு வாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குறைந்தபட்ச உடற் செயல்பாடு மற்றும் மனஅழுத்தத்தை தவிர்க்கவேண்டும்’ என்று தெரிவித்தனர். அதனையடுத்து, அரசியலுக்கு வரவில்லை என்று அறிக்கை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்‘நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். மன்னியுங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

  இந்தநிலையில், ‘உடல்நிலை காரணமாக கட்சித் தொடங்கப் போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். வீட்டிலிருந்தபடியே தியானம், உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

  இந்நிலையில், ரஜினி இல்லத்திற்கு நமோ நாராயண சுவாமிகள் இன்று வருகைத் தந்தார். அவரை ரஜினிகாந்தும், அவரது மனைவியும் வரவேற்று ஆசி பெற்றனர். பின்னர் மன அமைதியை ஏற்படுத்தும் ஸ்படிக மாலையை ரஜினிக்கு அணிவித்த நமோ நாராயண சுவாமிகள் சிறிது நேரம் உரையாடி விட்டு சென்றார். இந்த போட்டோ சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: