’நம்ம வீட்டு பொண்ணு’ சீரியலில் இணைந்த பிரபலம்! யார் தெரியுமா?

நம்ம வீட்டு பொண்ணு

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள நம்ம வீட்டு பொண்ணு சீரியலில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெங்கட் நடிக்க உள்ளார்.

  • Share this:
எப்போதும் புதிய முயற்சிகளையும், ஷோக்களையும் அறிமுகப்படுத்துவதில் முதல் இடத்தில் இருக்கும் விஜய் டிவியில் விரைவில் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த சீரியல் தொடர்பான அப்டேட்களும் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

விஜய் டிவியின் முக்கிய இயக்குநராக வலம் வரும் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய சீரியலுக்கு ‘நம்ம வீட்டு பொண்ணு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. வி.ஜே பப்பு மற்றும் ராஜா ராணி சீரியலில் நடித்து மக்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றிருந்த ஷாபானா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இவர்களுடன் புதிய பிரபலம் ஒருவரும் இணைந்துள்ளார். அவர் வேறுயாருமல்ல. 90களில் பல சீரியல்களில் நடித்து வந்த வெங்கட், பின்னர் தொலைக்காட்சிகளில் இருந்து முழுவதுமாக ஒதுங்கியிருந்தார். அவர் எங்கு இருக்கிறார்? என்ற தகவல்கூட ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது. மேலும், சீரியல்களில் பரீட்சையமான முகமாக இருந்தாலும், நீண்ட இடைவெளிவிட்டதால் அவரின் முகமும் மக்களிடையே மறந்துபோய் இருக்கும் என கூறலாம்.

ALSO READ | என்னை திருமணம் செய்துகொள்வீர்களா? குதர்கமான கேள்வி கேட்ட ரசிகர்க்கு மீனா சொன்ன சுவாரஸ்ய பதில்

ஆனால், அவர் நம்ம வீட்டு பொண்ணு சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். அவர் இந்த சீரியலில் நடிக்கும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. நடிகர் பப்பு உள்ளிட்ட குழுவினருடன் வெங்கட் இருக்கிறார்.



ஏற்கனவே சீரியல்களில் நடித்து அனுபவமிக்கவராக இருப்பதால் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் அவர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன கதாப்பாத்திரம் என்பது எபிசோடுகள் ஒளிபரப்பாகும்போது தெரியவரும். அதுவரை சஸ்பென்ஸ் நீடிக்கும். நாடகத்தை இயக்கும் பீரவீன் பென்னட், ஏற்கனவே கூறியதுபோல் ஸ்டார் இயக்குநராக இருப்பதால் இந்த சீரியல் மீது இயல்பாகவே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ALSO READ |  நடிகர் சூர்யாவுக்கு இந்த எதிர்ப்பு புதிதல்ல.. அநீதிகளுக்கு எதிராக விடாது ஓங்கி ஒலிக்கும் சூர்யாவின் குரல்..

கனா காணும் காலங்கள் தொடரில் இணை இயக்குநர்களில் ஒருவராக இருந்த அவர், சரவணன் மீனாட்சி 2 தொடரை இயக்கி வெற்றி பெற வைத்தார். அந்த தொடரில் இர்பான் - ரச்சிதா, கவின் - ரச்சிதா ஜோடி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியது. காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் பெரும் வெற்றியை பெற்றதையடுத்து சரவணன் - மீனாட்சி சீரியல் 3 பாகத்தையும் பீரவீன் பென்னட் இயக்கினார்.

 



 




View this post on Instagram





 

A post shared by Shabishabnam (@shabishabnam_)






 

அந்த சீரியலுக்குப் பிறகு ஆல்யா மான்சா - சஞ்சீவ் ஜோடியில் இயக்கிய ராஜா ராணி சீரியல் பெரும் வெற்றியை பெற்றது. தொடர் வெற்றிகளை பெற்ற பிரவீன் பென்னட் அடுத்தடுத்து இயக்கி வரும் சீரியல்களும் மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது அவர் பாரதி கண்ணம்மா, பொம்முக்குட்டி அம்மாவுக்கு, ராஜா ராணி 2 ஆகிய சீரியல்களை இயக்கி வருகிறார். ஸ்டார் இயக்குநருடன், ஸ்டார் நடிகர் வெங்கட்டும் இணைந்திருப்பதால், நிச்சயமாக நல்ல கதையம்சம் கொண்ட தொடராக இது இருக்கும் என கூறப்படுகிறது.
Published by:Sankaravadivoo G
First published: