Home /News /entertainment /

விஜய் டிவி-யில் ஆகஸ்ட் 16 முதல் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் "நம்ம வீட்டு பொண்ணு"...!

விஜய் டிவி-யில் ஆகஸ்ட் 16 முதல் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் "நம்ம வீட்டு பொண்ணு"...!

நம்ம வீட்டு பொண்ணு

நம்ம வீட்டு பொண்ணு

ரியாலிட்டி ஷோக்களுக்கு அடுத்தபடியாக விஜய் டிவி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருவது அதில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள்.

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் நாடி துடிப்பு அறிந்து ரியலிட்டி ஷோக்கள் உட்பட பல நிகழ்ச்சிகளை டெலிகாஸ்ட் செய்வதில் விஜய் டிவி எப்போதுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சிறுவர்கள், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் பல்வேறு நிகிழ்ச்சிகளை ஒளிபரப்பை தனக்கென மிகப்பெரிய ரசிகர்களை வட்டத்தை கொண்டுள்ளது விஜய் டிவி. அந்த வகையில் ரியாலிட்டி ஷோக்களுக்கு அடுத்தபடியாக விஜய் டிவி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருவது அதில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள். பல பிரபல சேனல்களை போலவே விஜய் டிவி-யிலும் எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

அந்த வகையில் ப்ரைம் டைமிங்கில் விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களான பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி மற்றும் ராஜா ராணி 2 உள்ளிட்ட சீரியல்களை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள சீரியல்களாக இருந்து வருகின்றன. இதனிடையே அண்மையில் இரவு 7.3 மணிக்கு தமிழும் சரஸ்வதியும் என்ற புதிய சீரியல் ஒன்றும் ஒளிபரப்பாக துவங்கி இருக்கிறது விஜய் டிவி-யில். இதனிடையே அடுத்தடுத்து பல புதிய சீரியல்களை களமிறக்கி மேலும் பல ரசிகர்களை ஈர்க்கும் முயற்ச்சியில் இறங்கி இருக்கிறது சேனல் நிர்வாகம். இதன் ஒரு பகுதியாக சேனலில் ஏற்கனவே பல ஹிட் சீரியல்களை டைரக்ட் செய்து வரும் பிரவீன் பென்னட் இயக்கத்தில், "நம்ம வீட்டு பொண்ணு" என்ற புத்தம் புதிய சீரியலை வரும் திங்கள் முதல் (ஆகஸ்ட் 16) ஒளிபரப்பு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது விஜய் டிவி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பான ப்ரமோ வீடியோ கடந்த சில வாரங்களாக விஜய் டிவி-யில் தொடர்ந்து போடப்பட்டு வருகிறது. முதன் முதலாக கனா காணும் காலங்கள் சீரியலில் அசிஸ்டென்ட் டைரக்டராக வேலை பார்த்த பிரவீன் பென்னட், சரவணன் மீனாட்சி 2 சீரியல் மூலம் டைரக்டராக தடம் பதித்தார். இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ராஜா ராணி, பாரதி கண்ணம்மா,பொம்முக்குட்டி அம்மாவுக்கு,ராஜா ராணி 2 உள்ளோட்ட பல சீரியல்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இவர் இயக்கத்தில் "நம்ம வீட்டு பொண்ணு" சீரியல் ஒளிபரப்பாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலில் கார்த்திக் என்ற கேரக்டரில் ஹீரோவாக நடிகர் சுர்ஜித் குமார் நடிக்கிறார். மீனாட்சி கேரக்டரில் நடிகை அஷ்வினி ஆனந்திதா, வேலாயுதம் என்ற கேரக்டரில் நடிகர் ரவி, விசாலாட்சியாக நடிகை நித்யா, செல்வியாக நடிகை பிரியதர்ஷினி, மலர் கேரக்டரில் வைஷாலி தணிகா, அனுவாக அருணிமா சுதாகர் நடிக்கின்றனர். ராஜா ராணி சீரியலில் நடித்த நடிகை ஷப்னம் இந்த சீரியலில் வடிவு என்ற கேரக்டரில் நடிக்கிறார். இவர்கள் அனைவருடனும் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் மீண்டும் இணைந்துள்ளார் பிரபல சீரியலை நடிகர் வெங்கட்.

இந்த சீரியலின் கதை கார்த்திக் மற்றும் மீனாட்சி கேரக்டர்களை சுற்றி நகரும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. கூட்டு குடும்ப சூழலில் பிறந்து வளர்ந்த கார்த்திக் பொறுப்பானவன். ஆனால் இவனுக்கு நேர் மாறாக ஒற்றை குழந்தையாக வளர்ந்தவள் மீனாட்சி. இயற்கையாகவே பிடிவாத குணம் மற்றும் குறுகிய மனநிலை கொண்டவள். இருவரும் எதிர்பாராத திருப்பமாக குடும்ப விழா ஒன்றில் சந்திக்க நேருகிறது.

Also read... கிளாசிக் to கிளாமர்: ஆயிஷாவின் அசத்தல் புகைப்படங்கள்!

இவர்கள் சந்திப்பின் ஆரம்பமே சண்டையுடன் நடக்கிறது. ஆனால் இவர்கள் இருவரையும் அருகருகே பார்க்கும் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக இருப்பதாக பேசி கொள்கிறார்கள். மேலும் இவர்களின் திருமணத்திற்கு திட்டமிடுகிறார்கள். ஆனால் பெரியவர்களின் விருப்பப்படி இவர்கள் ஜோடி சேர்வார்களா.? அவர்ளைன் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதே இந்த சீரியலில் மையமாக இருக்கும் என்று தெரிகிறது. நம்ம வீட்டு பொண்ணு சீரியல் வரும் ஆகஸ்ட் 16 முதல் திங்கள் to சனி வரை மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி