மதுவுக்கு அடிமை... நமீதா பட இயக்குநர் திடீர் வெளியேற்றம்

நடிகை நமீதா

‘அகம்பாவம்’ படத்தில் மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  அகம்பாவம் படத்தின் இயக்குனர் திடீரென படத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

  ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் `அகம்பாவம்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார். திருமணத்திற்குப் பிறகு நமீதா நடிக்கும் முதல் படம் இது. பெண் போராளிக்கும், ஜாதியை வைத்து அரசியல் பண்ணும் ஒரு மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை படமாக உருவாக்கி வருகிறார்கள்.

  இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, வில்லனாக நடித்து தயாரித்தும் வருகிறார் வாராகி. ‘சத்ரபதி’ படத்தை இயக்கிய ஸ்ரீமகேஷ் தற்போது படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.  இதுகுறித்து தயாரிப்பாளர் வாராகி கூறும்போது, ‘இயக்குநர் ஸ்ரீமகேஷ், பட வாய்ப்பு இல்லாமல் மதுவுக்கு அடிமையாகி இருந்தார். அவருடைய வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த, இப்படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்தேன். குடிக்காமல் படப்பிடிப்பை முடித்துத் தரும்படி கேட்டுக்கொண்டு ஒப்பந்தம் செய்தேன். ஆனால், அவர் ஒப்பந்தத்தை மீறி தினமும் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார். இதனால், இந்தப் படத்தில் இருந்து அவரை நீக்கிவிட்டேன். நானே இப்படத்தை இயக்கவும் முடிவு செய்துவிட்டேன்’ என்றார்.  தயாரிப்பாளர் வாராகி இதற்கு முன், ‘சிவா மனசில புஷ்பா’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது எப்படி? - ஹன்சிகா விளக்கம்

  ‘அகம்பாவம்’ படத்தில் மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோலிசோடா, சண்டிவீரன் ஆகிய படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஜெகதீஷ் வி.விஸ்வம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு சின்னு சதீஷ் படத்தொகுப்புப் பணிகளை கவனிக்கிறார். இந்தியன் பாஸ்கர் சண்டைக் காட்சிகளை அமைத்து வருகிறார்.

  ஆல் இன் ஆல் அரசியல் - வீடியோ

  Published by:Sheik Hanifah
  First published: