பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில்18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். எந்த ஒரு பிக்பாஸ் சீசனிலும் இல்லாத வகையில் இந்த முறை திருநங்கையான நமீதா மாரிமுத்து போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.நமீதா மாரிமுத்து பிரபல மாடல் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பல படங்களிலும் நடித்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் நடந்து வரும் கதை சொல்லும் டாஸ்கில் நமீதா மாரிமுத்து தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்களை பகிர்ந்துக்கொண்டார். 8 வயதில் உடலில் நடந்த மாற்றத்தால் தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்று பெற்றோர்களை எதிர்த்து போராடி ஒரு சாதனை திருநங்கையாக பிக்பாஸ் வீட்டில் பேசினார். மேலும் ‘எங்கள மாதிரி உள்ளவங்கள புரிஞ்சிக்கணும், புரிஞ்சிக்காம வீட்டை விட்டு வெளியே அனுப்புறதுனால தான் நாங்க படாத கஷ்ட படுறோம், எங்கள படிக்க மட்டும் வையுங்க’ என்று கண்ணீருடன் பேசினார்.ஒரு மணி நேர எபிசோடில் நமிதா மாரிமுத்து கிட்டத்திட்ட 40 நிமிடங்கள் பேசினார்.
பிக்பாஸ் வீட்டில் வழக்கமாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கமல்ஹாசனுடன் உரையாடுவார்கள். அந்த வகையில் இன்றைய ப்ரோமோ ரிலீஸான நிலையில், வீட்டில் இருக்கும் 17 போட்டியாளர்களும் சோபாவில் அமர்ந்துள்ள மாதிரி காட்டப்பட்டது. ஆனால் அதில் நமீதா மாரிமுத்து இல்லை. இதனால் நமீதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணத்தினால் போட்டியை விட்டு விலகியதாக சில செய்திகள் உலா வருகின்றன.
சிலர் நமீதா மாரிமுத்துக்கு ரெட் கார்ட் கொடுத்து அனுப்பட்டதாகவும் கூறுகிறார்கள். ஆனால் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது என்பதை அறிந்துக்கொள்ள இன்று இரவு 9.30 மணி வரை காத்திக்க வேண்டும்.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.