• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 17 வயதில் எடுத்த ஹாட் புகைப்படம் - நமீதா சொன்ன ரகசியம்!

17 வயதில் எடுத்த ஹாட் புகைப்படம் - நமீதா சொன்ன ரகசியம்!

நமீதா

நமீதா

17 வயதில் மாடல் உலகில் நுழைந்த நமீதா, பின்னர் திரைத்துறையில் புகுந்து கவர்ச்சியின் மூலம் உச்சத்துக்கு சென்றார்.

  • Share this:
கவர்ச்சிக் கன்னியாக வலம்வந்த நமீதா, 17 வயதில் எடுத்த புகைப்படத்தை ரசிகர்களுக்காக வெளியிட்டு அதன் ரகசியத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட திரையுலகில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த நமீதா, 17 வயதில் முதன் முதலாக எடுத்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சிவப்பு நிற மேலாடையில் கவர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ள அந்தப் புகைப்படம் தான், நமீதாவின் முதல் போட்டோஷூட்டாம். 2000 ஆம் ஆண்டில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, பிரபல பாலிவுட் நடிகர் பொம்மன் இரானி, நமீதாவை மிகவும் அழகாக படம்பிடித்துள்ளார். அந்தப் புகைப்படம், பெமினா மிஸ் இந்தியா 2001 போட்டிக்கு நமீதா தேர்வாக காரணமாக இருந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.




17 வயதில் மாடல் உலகில் நுழைந்த நமீதா, பின்னர் திரைத்துறையில் புகுந்து கவர்ச்சியின் மூலம் உச்சத்துக்கு சென்றார். இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், "கடினமான கனவுக்கு கடினமாக உழையுங்கள். எனக்கு அப்போது வயது 17. நிறைய நிறைய கனவுகளுடன் நானும் மும்பையில் இருந்தேன். அப்போது, தான் முதல் போட்டோஷூட்டில் கலந்து கொண்டேன். என்னை புகைப்படம் எடுத்தது பிரபல லெஜண்டரி நடிகர் மற்றும் புகைப்பட கலைஞர் பொம்மன் இரானி. புகைப்படம் எடுக்கும்போது என்னுடைய பெற்றோரும் உடனிருந்தனர்.

ஒரே நாளில் எடுக்கப்பட்ட புகைப்படம். போட்டோஷூட் முடிந்தபிறகு, பொம்மன் சார் எங்களுக்கு மிகப்பெரிய பீட்சா ஆர்டர் செய்து கொடுத்தார். இந்த புகைப்படமே பெமினா மிஸ் இந்தியா 2001 -க்கு நான் தேர்வாக காரணமாக இருந்தது. இதனை என்னால் மறக்க முடியாது" என தெரிவித்துள்ளார். நடிகை நமீதாவுக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவையில்லை. மச்சான் என்ற வார்த்தையை தன்னுடைய டிரேட் மார்க்காக ஆக்கியவர். ’என்ன மச்சான் சௌக்கியமா’ என்றே ரசிகர்களை அழைக்கும் அவர், சரத்குமார், விஜய் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

Also read... ஜெயலலிதா நினைவிடத்தில் 'தலைவி’ கங்கனா ரனாவத் அஞ்சலி...!

நடன இயக்குநர் கலா மாஸ்டருடன் ஏற்பட்ட நட்பால் சின்னத்திரையில் நுழைந்த அவர், கலைஞர் தொலைக்காட்சியில் ‘மானாட மயிலாட’ ஷோவுக்கு நடுவராக பணியாற்றினார். அதேபோல் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஷோவுக்கும் நடுவராக இருந்துள்ளார். மிக முக்கியமாக பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.

நடிப்பைக் கடந்து அரசியலிலும் பிஸியாக இருக்கிறார். பா.ஜ.கவில் இணைந்த அவர், அந்தக் கட்சிக்காக கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலுக்குப் பிறகு மும்பை சென்ற நமீதா, இப்போது கைவசம் இருக்கும் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் எப்போது மீண்டும் நடிக்கப் போகிறார் என்பது சர்பிரைஸாக உள்ளது. விரைவில் அதற்காக அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: