• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • கமல்ஹாசன் ஒரு மனநோயாளி: அதிமுக நாளிதழ் கடும் விமர்சனம்

கமல்ஹாசன் ஒரு மனநோயாளி: அதிமுக நாளிதழ் கடும் விமர்சனம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை மனநோயாளி என விமர்சித்துள்ளது நமது அம்மா நாளிதழ்.

  திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரவக்குறிச்சியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பரப்புரையில் ஈடுபட்டார்.

  அப்போது பேசிய அவர், “இஸ்லாமியர்கள் அதிகம் பேர் இருக்கும் இடம் என்பதால் சொல்லவில்லை; காந்தி சிலைக்கு முன் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் பெயர் கோட்சே என்றார். மேலும் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரனாக, அந்தக் கொலைக்கு கேள்வி கேட்க வந்திருப்பதாக தெரிவித்தார்.

  கமல்ஹாசனின் இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில், விஷத்தைக் கக்கி வரும் கமல்ஹாசனின் நாக்கை அறுக்கவேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருப்பதும் சர்ச்சையாகியுள்ளது.

  இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது நமது அம்மா நாளிதழ். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்துதான் முதல் தீவிரவாதி என்று உளறல் நாயகன் கமல்ஹாசன் உலகின் மூன்றாம் பெரும் சமயத்தை இழிவுபடுத்தி இருக்கிறார். என்ன செய்வது. முடிந்து போன தனது கலையுலக வாழ்வை அரசியலை வைத்து சமன் செய்துகொள்ள அவர் செய்து வரும் பைத்தியகாரதனங்களில் தலையாய ஒன்றுதான் இது போன்ற அவரது கெட்ட பேச்சும்.

  தனி ஒருவரின் தவறை ஒரு மதத்தின் தவறாக சித்தரிப்பது என்றால் குடும்பத்தோடு சென்று பார்த்து ரசிப்பதற்கு ஏதுவாக சமூகத்தை பழுதுபார்க்கும் அறிவுசார் சாதனமாக பயன்பட்ட தமிழ்சினிமாவை வெறும் சதைக்களமாக மாற்றிய இந்த சண்டாளனை என்னவென்று விமர்சிப்பது?

  தங்கத்தை தரம்பார்த்து சொல்வதற்கு முன்னால் தாம் ஓர் உரைகல்லாக வாழ்ந்து காட்ட வேண்டுமென வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாது உன்னத தலைவர்களாக இருந்து மறைந்த எம்.ஜி.ஆர் போன்றோர் கோலோச்சிய கலையுலகம் அன்று தரமான படங்களை தந்தது. கூடவே தயாரிப்பாளர்களையும் பார்த்துக் கொண்டது என்றால் தன்னை வைத்து படமெடுத்த ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களையும் ஓட்டாண்டியாக்கிய இந்த கமல்ஹாசனை எப்படி விமர்சிப்பது?

  ஒரு படத்தில் கடவுளை விமர்சிப்பது, மற்றொரு படத்தில் சைவத்தையும், வைணவத்தையும் சண்டைக்கு இழுத்துவிடுவது, மற்றொரு படத்தில் தீவிரவாதம் இஸ்லாமியர்களுக்கே உரியது என்பது போல முத்திரை குத்துவது. இப்படியாக மக்களிடையே பிளவையும், மதங்களுக்கிடையே சிண்டு முடிதலையும் வைத்து தன் பிழைப்பை ஓட்ட நினைக்கும் இந்த மனநோயாளியால் நடத்தப்படும் ‘மக்கள் அநீதி மய்யத்தை’ தேர்தல் ஆணையம் தாமதமின்றி தடைசெய்ய வேண்டும்.

  பொதுவுடைமைவாதி போல் ஒருநாள் வேஷம், பெரியாரிஸ்ட் போல மறுநாள் அரிதாரம். ஆத்திகன் போலவும் அவ்வப்போது அவதாரம், நாத்திகன் போல பலநாள் பகல்வேஷம் இப்படியாக ஏறத்தாழ ஒரு முத்திப்போன பைத்தியக்காரனாகவே தமிழகத்தை சுற்றி வரும் இந்த மொத்தமும் வில்லன் உடனடியாக இந்து மதத்தை இழிவுபடுத்தியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

  சகிப்புத்தன்மைக்கே இவ்வுலக சான்றாகவும், இம்மையில் செய்யும் பாவத்துக்கு மறுமையிலும் தண்டனை உண்டு என மனித பிழைகளை சுத்திகரிக்கும் மாமருந்தாகவும் திகழ்ந்து வரும் இந்து மதம், மதங்கள் கடந்து மனிதத்தை நேசிக்க செய்யும் மகோன்னத வாழ்வியல் முறை அல்லவா? ஆனால் இந்த உன்னதங்கள் எல்லாம் பொலிகாளையாக அலையும் பொறுப்பற்ற மனிதர்களுக்கு புரியாது.

  அதேவேளையில், மக்களை பிளவுப்படுத்து அதன்மூலம் தன் அரசியல் வாழ்வுக்கு ஆக்சிஜன் தேடும் இப்பேர்வழி தொடர்ந்து மதங்களை காயப்படுத்தும் காரியத்தை கைவிடாவிட்டால் நடிகனாக இதுநாள் வரை அவர் சேமித்து வைத்திருக்கும் பேரும், புகழையும் மொத்தமாக கொட்டி கவிழ்க்கும் பரிதாபம் விரைவில் நிகழ்ந்தே தீரும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  VIDEO: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து - கமல்ஹாசன்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sheik Hanifah
  First published: