முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / "இன்றைக்கு சிவராத்திரி தான்" மகளின் க்யூட் அடாவடிக்கு நகுல் ரிப்ளை!

"இன்றைக்கு சிவராத்திரி தான்" மகளின் க்யூட் அடாவடிக்கு நகுல் ரிப்ளை!

 நகுல்

நகுல்

கொரோனா லாக்டவுனால் சூட்டிங்கும் இல்லாத நிலையில், மனைவி மற்றும் குழந்தைகளுடனேயே பெரும்பாலான நேரத்தை அவர் செலவிட்டு வருகிறார்.

  • Last Updated :

மகள் தொந்தரவு செய்வதை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நகுல், இன்றைக்கு சிவராத்திரி தான் என கூறும் வீடியோ நெட்டிசன்களை ரசிக்க வைத்துள்ளது.

2003 ஆம் ஆண்டு நடிகர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நகுல், மாசிலமாணி, காதலில் விழுந்தேன், கந்தர்வ கோட்டை, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தன்னுடைய நீண்டநாள் தோழியான ஸ்ருதியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு, கியூட்டான மகள் ஒருவர் இருக்கிறார். அவர் செய்யும் சேட்டைகள் ஒவ்வொன்றையும் படம் பிடிக்கும் நகுல், அதனை தன்னுடைய ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றி வருகிறார்.


கொரோனா லாக்டவுனால் சூட்டிங்கும் இல்லாத நிலையில், மனைவி மற்றும் குழந்தைகளுடனேயே பெரும்பாலான நேரத்தை அவர் செலவிட்டு வருகிறார். பாடுவது, கிட்டார் வாசிப்பது, ஏதாவதொரு குறுப்புத் தனங்களை செய்து குழந்தையை சிரிக்க வைப்பதை தற்போது நகுல் வாடிக்கையாக வைத்திருக்கிறார். அந்தவகையில், அண்மையில் தூங்குவதற்கு தயாராக இருக்கும் நகுலை, அவரது செல்ல மகள் அடித்து விளையாடுகிறார். இரவில் தூங்குவது பற்றிய எண்ணம் சிறிதும் இல்லாமல், அவர் செல்லமாக விளையாடுவதை பதிவு செய்துள்ள நகுல், இன்றைக்கு சிவராத்திரி தான் என கூறுகிறார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நகுலின் வீடியோவை நெட்டிசன்கள் ரசித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இளம் நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் சின்னத்திரையிலும் நகுல் உலா வருகிறார். நடன நகிழ்ச்சி, பாட்டு ஷோக்களிலும் நடுவராக இருக்கிறார். நல்ல டான்ஸர் மற்றும் பின்னணி பாடகராகவும் இருப்பதால், அவரை தொலைக்காட்சிகள் அழைக்கின்றன. தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுடன், நகுலும் நடுவராக இருக்கிறார். ஷிவானி, அனிதா, வனிதா, சோம்சேகர், சுரேஷ் சக்கரவர்த்தி, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், சென்றாயன் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

ஈரோடு ரமேஷூன், தீனாவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். திருமணமாகி 4 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறந்ததால் மிகவும் மகிழ்ச்சியடைந்த நகுல், குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து வைக்கிறார். சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மட்டுமே இன்ஸ்டாவில் பதிவேற்றினாலும், அவை ஒவ்வொன்றும் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கின்றன. பல மில்லியன் பார்வைகளையும் கடந்து செல்கிறது. 2018 ஆம் ஆண்டில் அவரது நடிப்பில் செய் என்ற படம் வெளியானது. பின்னணிப் பாடகராகவும் பல படங்களில் பாடியுள்ளார்.

Also read... Jagame Thandhiram: ஜகமே தந்திரத்தில் ஜோஜு ஜார்ஜ் - கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்!

அந்நியன் படத்தில் காதல் யானை வருகிற ரெமோ, கஜினியில் எக்ஸ் மச்சி, வேட்டையாடு விளையாடு படத்தில் மஞ்சள் வெயில், கற்க கற்க, காதலில் விழுந்தேன் படத்தில் நாக்க மூக்கா ஆகிய ஹிட் பாடல்களையும் நகுல் பாடியுள்ளார்.

top videos

    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    First published:

    Tags: Actor Nakul