விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை நக்ஷத்ரா நாகேஷ் தனது காதல் கணவருடன் பகிர்ந்துள்ள வேக்கேஷன் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சென்னையை சேர்ந்த பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகையான நக்ஷத்ரா நாகேஷ் தற்போது சின்னத்திரையில் கலக்கி வருகிறார். பிரபல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியை தொடங்கியதன் மூலம் லைம்லைட்டிற்கு வந்த நக்ஷத்ரா நாகேஷ், அதை தொடர்ந்து ஆடியோ லான்ஞ், விருதுகள் வழங்கும் விழா என ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
ஜோடி நம்பர் ஒன் சீசன் 8 நடன நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார். குறும்படங்களில் நடித்து வந்த நக்ஷத்ரா நாகேஷுக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் சின்னத்திரையில் கால் பதித்த அவர், தொடர்ந்து லஷ்மி ஸ்டோர்ஸ், நாயகி போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அரபிக்குத்து பாடலுக்கு ஷிவானி நாராயணன் கவர்ச்சி டான்ஸ் - வைரலாகும் வீடியோ!
இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ‘சரஸ்வதி’ என்ற லீடு ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘ஹே சினாமிகா’ உட்பட 15க்கும் மேற்பட்ட படங்களில் நக்ஷத்ரா நாகேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சினிமா, சீரியல் என பிசியாக நடித்து வரும் நக்ஷத்ரா நாகேஷ் சோசியல் மீடியாவிலும் செம்ம பிரபலமாக வலம் வருகிறார். இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூ-டியூப் என சகல சோசியல் மீடியா மூலமாக தன்னுடைய ரசிகர்களுக்கு தன்னைப் பற்றிய மகிழ்ச்சியான மற்றும் பாசிட்டிவ் விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் மட்டும் நக்ஷத்ரா நாகேஷை 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். ராகவ் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நக்ஷ்த்ரா கடந்த ஆண்டு தனது காதலரை கணவராக கரம் பிடித்தார். பள்ளி நாடக குழுவில் நடித்த போது தனது சீனியரான ராகவ் உடன் நக்ஷத்ராவிற்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறி, இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த ஹேப்பி ஜோடி தங்களுக்கு கிடைத்த விடுமுறையை கழிக்க ஜாலியாக டூர் கிளம்பியுள்ளனர். தற்போது தனது காதல் கணவர் ராகவ் உடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள ஸ்கை டைனிங் ரெஸ்ட்ராண்டில் உணவருந்தும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காதல் கணவருடன் செம்ம த்ரில்லிங்காக ஸ்கை டைனிங் ரெஸ்டாரண்டில் சிரித்தும், ரசித்தும் உணவருந்தியுள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. இன்று போல் என்றும் மகிழ்ந்திருங்கள் என சோசியல் மீடியாவில் நக்ஷத்ரா - ராகவ் தம்பதிகளை நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர். இதில் கணவர் ராகவிற்கு நக்ஷத்ரா நாகேஷ் கன்னத்தில் முத்தமிட்ட போட்டோ மட்டும் சிலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் சிலர் “வீட்டிற்கு உள்ளே செய்ய வேண்டியதை எல்லாம் வெளியே செய்யுறீங்களே” என நெகட்டிவ் கமெண்ட்களையும் செய்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.