Vijay Television: விஜய் டிவி-யின் புத்தம் புது சீரியலில் ஜோடி சேரும் சின்னத்திரை ஸ்டார்கள் - ரசிகர்கள் ஆவல்!

நக்‌ஷத்ரா

இந்த சீரியல் குறித்து விஜய் டிவி வெளியிட்டுள்ள ப்ரமோ வீடியோவே மிகவும் கலகலப்பாக இருக்கிறது.

  • Share this:
விஜய் டிவி சீரியல்கள் என்றாலே ரசிகர்கள் மனதில் அவற்றுக்கு தனி இடமுண்டு. வித்தியாசமான மற்றும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் கூடிய ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி சின்னத்திரை ரசிகர்களை கவருத்தில் ஸ்டார் விஜய் எப்போதுமே தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் "தமிழும் சரஸ்வதியும்" என்ற புதிய சீரியலை விஜய் டிவி விரைவில் ஒளிபரப்ப உள்ளது. இது தொடர்பான ப்ரமோ வீடியோவையும் விஜய் டிவி யூடியூப் உள்ளிட்ட தனது அதிகார்பூர்வ சோஷியல் மீடியாக்களில் ரிலீஸ் செய்துள்ளது. இந்த புத்தம் புதிய சீரியலில் ஹீரோவாக நடிகர் தீபக் தினகர், ஹீரோயினாக நக்ஷத்திரா நாகேஷ் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

முன்னணி தமிழ் தொலைக்காட்சி நடிகரான தீபக் தினகர் சன் டிவி-யில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் தமிழ் என்ற கேரக்டரில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். காதல் வைரஸ், இளசு புதுசு ரவுசு, இவனுக்கு தண்ணில கண்டம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பின்னணி குரல் கலைஞர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் உள்ளிட்ட பல பரிமாணங்களில் முத்திரை பதித்து வருகிறார். சிறந்த ஆங்கராகவும் இருந்து வருகிறார். வி.ஜே.நக்ஷத்ரா என்று அழைக்கப்படும் பிரபல சின்னத்திரை நடிகை நக்ஷத்ரா நாகேஷ் , ரசிகர்கள் மனதை கவர்ந்த ஆங்கராக சன் டிவியில் இருந்தார். ஷார்ட் பிலிம், மியூசிக் ஆல்பம் உள்ளிட்டவற்றிலும் பணியாற்றி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சில சீரியல்களில் தலைகாட்டியிருந்த இவர் சன் டிவி-யில் குஷ்புவுடன் நடித்த லக்ஷ்மி ஸ்டோர்ஸ் மூலம் மேலும் பிரபலமடைந்தார். அதன் பிறகு ரோஜா, மின்னலே, நாயகி என அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு இப்போது தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

Also read... Kadaikutty Singam: கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடிகை நிமிஷிகா - வெளியான புகைப்படம்!

இந்த சீரியல் குறித்து விஜய் டிவி வெளியிட்டுள்ள ப்ரமோ வீடியோவே மிகவும் கலகலப்பாக இருக்கிறது. முதல் சீனிலேயே கோவிலுக்கு சென்று பிள்ளையாரிடம் இந்த முறையாவது நான் 12-வது பாஸ் செய்து அப்பா மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்று நக்ஷத்திரா (சரஸ்வதி கேரக்டர்) வேண்டி கொள்கிறார். பின்னர் கோவில் குருக்கள் பிரசாதம் கொடுக்கும் போது என்ன சரஸ்வதி, 12-வதே எட்டாவது அட்டம்ப்ட்டா.? கஜினி முகமதுவையே மிஞ்சிடுவ போல இருக்கே என்று கலாய்கிறார். அதற்கு அவர் படிப்பு மட்டும் வாழ்க்கை இல்லை என்று சிரித்து கொண்டே செல்கிறார். அப்போது சரஸ்வதி சிலை முன் நின்று, படிப்பால் தனது வாழ்க்கையே போய் விட்டதாகவும், ஒரு பெண் படிப்பில்லை என்று சொல்லி தன்னை ரிஜெக்ட் செய்து விட்டதாக கூறி புலம்பி கொண்டிருக்கிறார் தீபக்.இதை பார்க்கும் நக்ஷத்திரா கடவுள் சரஸ்வதி பேசுவது போல பேசி, பக்தா உன் ஆசைகள் கண்டிப்பாக நிறைவேறி உன் அம்மா மனதும் குளிரும் என்று அசரீரி குரல் போல சொல்கிறார். நன்கு படித்த ஒரு அழகான பெண் அவரை தேடி வர போவதாகவும் கார்மேகங்கள் சூழ, விண்ணதிரும் இடி சத்தத்தோடு, சோவென்று ,மழை பெய்யும் போது அந்த பெண்ணை நீ பார்ப்பாய் என்றும் கூறுகிறார். மின்னலே ரீமாசென் போல மழையில் டான்ஸ் ஆடி கொண்டிருக்கும் போது தீபக், நக்ஷத்திராவை பார்ப்பது போல முடிகிறது ப்ரமோ. ரசிகர்களை கவர்ந்த இரு நட்சத்திரங்கள் இந்த சீரியலில் ஜோடியாக நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: