Home /News /entertainment /

டிவி-யில் முதன் முதலாக தோன்ற போகும் மகள் அகிரா -நடிகர் நகுல் நெகிழ்ச்சி பதிவு..

டிவி-யில் முதன் முதலாக தோன்ற போகும் மகள் அகிரா -நடிகர் நகுல் நெகிழ்ச்சி பதிவு..

நடிகர் நகுல்

நடிகர் நகுல்

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இந்த வாரம் நகுலின் மகள் அகிரா முதன் முதலாக தொலைக்காட்சியில் தோன்ற போவது குறித்து நடிகர் நகுல் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவி-யின் மெகா ஹிட் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் இதுவரை வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்துள்ளது. இந்த ஷோவின் 5ம் சீசன் அநேகமாக அக்டோபரில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்புக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. இந்நிலையில் விஜய் டிவியில் "பிக் பாஸ் ஜோடிகள்" என்ற பெயரில் இதுவரை 4 சீசன்களில் பங்கேற்றுள்ள பல பிக் பாஸ் பிரபலங்களை ஒன்றிணைத்து புதிய டான்ஸ் ஷோ ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பல்வேறு பிக் பாஸ் பிரபலங்கள் ஜோடியாக ஒன்றிணைந்து தங்களது நடன திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இந்த டான்ஸ் ஷோவிற்கு பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடுவராக இருக்கிறார். துணை நடுவராக பிரபல நடிகரும், பின்னணி பாடகருமான நகுல் ஜெய்தேவ் இருக்கிறார். தமிழகத்தில் இடையில் கொரோனா பரவல் அதிகரித்ததால் முழு லாக்டவுன் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் டிவி சேனல்களின் சீரியல் ஷூட்டிங் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் ஷூட்டிங் என அனைத்தும் பாதிக்கப்பட்டது.

தவிர பிக் பாஸ் ஜோடிகள் ஷோவில் பங்கேற்றிருந்த சில பிரபலங்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் இடையில் சில வாரங்கள் இந்த ஷோ ஒளிபரப்பாகாமல் இருந்தது. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மீண்டும் ஷூட்டிங்குகள் தொடங்கி நடைபெற்று வருவதால் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் புதிய எபிசோட்கள் தடையின்றி ஒளிபரப்பாகி வருகின்றன. இதனிடையே பிக்பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சி மூலம் தனது மகள் அகிரா முதல் முதலாக தொலைக்காட்சியில் தோன்ற உள்ளது குறித்து நடிகர் நகுல் மிகவும் உற்சாகமாக உள்ளார்.
தனது மகள் முதல் முதலாக டிவியில் தோன்ற உள்ளது குறித்து விஜய் டிவி-யின் பிக் பாஸ் ஜோடிகள் ப்ரமோ வீடியோவை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து உற்சாகத்தை வெளிப்படுத்தி உள்ளார் நகுல். எனக்கு மிகவும் பிடித்த ப்ரமோ இது என்று குறிப்பிட்டுள்ள நகுல், இதை மிகவும் சிறப்பானதாக்கிய #bbjodigal குழுவுக்கு நன்றி. எனது அகிரா முதல் முதலாக டிவி-யில் தோன்ற போகும் தருணம் அடங்கிய ஸ்பெஷல் ப்ரமோ வீடியோ இது.. நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Photos : சம்மர் அவுட் ஃபிட்டில் நடிகை ஓவியா - போட்டோஸ்..

இந்த ப்ரமோ வீடியோவில் அலைபாயுதே படத்திலிருந்து சிநேகிதனே பாடலை கிட்டாரை வாசித்தபடியே பாடி கொண்டிருக்கிறார் நகுல். அப்போது திடீரென வருகிறார் நகுலின் மனைவி ஸ்ருதி. தட்ஸ் மை டார்லிங் என்று உற்சாக குரல் எழுப்பும் நகுல், சற்று முன் தான் ஐஸ்வர்யா தத்தாவுடன் ரொமென்டிக் டான்ஸ் ஆடியதாக செட்டில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். அதற்கு அவர் அதெல்லாம் தெரிந்து தானே நகுலை திருமணம் செய்தேன் என்கிறார்.

Also Read : 200 எபிசோடுகளை கடந்த ’கண்ணான கண்ணே’ சீரியல் - செட்டில் கொண்டாடிய குழுவினர்..

அதன் பின் மகள் அகிராவை காட்டுங்கள் என அங்கிருப்பவர்கள் கேட்க உடனே நகுலின் மனைவி ஸ்ருதி குழந்தை அகிராவை அவர்களுக்கு லைவில் காட்டுகிறார். அப்போது மேலும் உற்சாகமடையும் நகுல், அவள் தான் என் உலகம் என்று கூறி "அடி கோவில் எதற்கு, தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி" என்ற வரிகளை ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலில் இருந்து பாடுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Big boss tamil, Vijay tv

அடுத்த செய்தி