பாட்ஷா ரஜினியுடன் எடுக்கப்பட்ட போட்டோவை பதிவிட்ட நக்மா

ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவியுடன் நக்மா

பாட்ஷா பட சமயத்தில் ரஜினியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை ரக்மா சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
1994-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘காதலன்’ திரைப்படத்தில் ஸ்ருதி என்ற கேரக்டரில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நக்மா. பின்னர் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்து வந்த அவர் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக பாட்ஷா படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததோடு மட்டுமின்றி நக்மாவுன் திரைப்பயணத்திலும் திருப்பு முனையாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து கன்னடம், மலையாளம், போஜ்புரி உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்த நக்மா அரசியலிலும் கால் பதித்தார். 2005-ம் ஆண்டு மகிளா காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட நக்மா, 2014-ம் ஆண்டு மீரட் தொகுதியில் போட்டியிட்டு 13,222 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். தற்போது அனைத்திந்திய மகிளா காங்கிரஸின் புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீரின் பொது செயலாளர் பொறுப்பில் இருக்கும் நக்மா ட்விட்டரில் பாஜக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உடன் பாட்ஷா பட சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது பதிவிட்டுள்ளார் நக்மா. ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவியுடனான இந்தச் சந்திப்பு லண்டனில் நடைபெற்றதாக தெரிவித்திருக்கும் நக்மா, மறக்கமுடியாத பாட்ஷா படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்ததற்காக தான் பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க: ஏ.ஆர்.ரஹ்மான், சங்கர், விக்ரம் மகன்களின் வைரல் போட்டோ

2017-ம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு அடிபட்டபோதே அவரைச் சந்தித்தர் நக்மா. அப்போது இந்தச் சந்திப்பில் அரசியல் இல்லை என்றும் நட்பு ரீதியான சந்திப்பு என்றும் நக்மா தெரிவித்திருந்தார்.
Published by:Sheik Hanifah
First published: