Home /News /entertainment /

நடிகர் சங்க அலுவலகத்தில் திடீர் தீ விபத்து.. சிறப்பு அதிகாரியின் ஆவணங்கள் தீயில் கருகியதா..?

நடிகர் சங்க அலுவலகத்தில் திடீர் தீ விபத்து.. சிறப்பு அதிகாரியின் ஆவணங்கள் தீயில் கருகியதா..?

நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து

நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து

நடிகர் சங்க அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறப்பு அதிகாரியின் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணிணி போன்ற சாதனங்கள் சேதமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
கடந்த ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தபால் வாக்கு, உறுப்பினர்கள் நீக்கம் போன்ற காரணங்களால் தேர்தலை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் மறுதேர்தல் நடத்தும் வரை சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பத்திர பதிவுத் துறையைச் சார்ந்த கீதா நியமிக்கப்பட்டார்.

தற்போது சிறப்பு அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ள நடிகர் சங்க அலுவலத்தில் இன்று காலை சுமார் 6 மணி அளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. வார விடுமுறையையொட்டி இரண்டு நாட்களாக அலுவலகம் பூட்டப்பட்டிருந்த நிலையில் இன்று காலை தியாகராயநகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் இருந்து புகை வரத்தொடங்கியுள்ளது. இதைப்பார்த்த கட்டட காவலாளி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க: என் இல்லத்திற்கு ரசிகர்கள் வர வேண்டாம் - ரஜினிகாந்த்

நிகழ்விடத்திற்கு விரைந்த தியாகராயநகர், தேனாம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்கள் மூலம் தீயை அணைத்தனர். அலுவலகத்தில் இருந்து பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். பட்டாசு வெடித்ததால் விபத்து ஏற்பட்டதா அல்லது மின்கசிவு காரணமாக விவத்து ஏற்பட்டதா என தேனாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

விபத்தில் சிறப்பு அதிகாரிக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் கணிணி போன்ற சாதனங்கள் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Nadigar Sangam

அடுத்த செய்தி