Home /News /entertainment /

நடிகர் சங்கத் தேர்தல் ரத்து - விஷால் தரப்பின் அடுத்த அதிரடி மூவ்!

நடிகர் சங்கத் தேர்தல் ரத்து - விஷால் தரப்பின் அடுத்த அதிரடி மூவ்!

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து திங்கட்கிழமை மேல்முறையீடு செய்ய விஷால் தரப்பு முடிவு செய்துள்ளனர்.

    தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலை ஒத்தி வைத்து நடிகர் சங்க பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தலை நடத்த அனுமதித்து, மறு உத்தரவு வரும் வரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இந்நிலையில் பெஞ்சமின், ஏழு,மலை ஆகியோர் நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் எங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. வெளியூர்களில் இருக்கும் உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான படிவம் கொடுக்கப்படவில்லை எனவே இத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதேபோல் தமிழக அரசு சார்பில் நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி சார்பில் வழக்கு தொடுத்திருந்தனர். அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

    அதில், “கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. 3 மாதத்துக்குள் வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தலை நடத்த வேண்டும். இத்தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்படுகிறார். மறுதேர்தல் நடத்தி முடிக்கும் வரை நடிகர் சங்க நிர்வாகத்தை அரசு நியமித்த சிறப்பு அதிகாரியான கீதா நிர்வகிப்பார்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நாசர் தலைமையை எதிர்த்துப் போட்டியிட்ட ஐசரி கணேஷ், பாக்யராஜ் உள்ளிட்ட சங்கரதாஸ் சுவாமிகள் அணியினர் வரவேற்றுள்ளனர். இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நாசர், விஷால் அணியினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி வரும் திங்கள் கிழமை மேல்முறையீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: விபத்தில் சிக்கிய இயக்குநர் சுசீந்திரனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Nadigar Sangam

    அடுத்த செய்தி