• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் - புதிதாக தேர்தல் நடத்தினாலும் சந்திக்கத் தயார் - சுவாமி சங்கரதாஸ் அணி முடிவு

நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் - புதிதாக தேர்தல் நடத்தினாலும் சந்திக்கத் தயார் - சுவாமி சங்கரதாஸ் அணி முடிவு

ஐசரி கணேஷ்

ஐசரி கணேஷ்

  • Share this:
நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் பழைய வாக்குகளை எண்ணினாலும் சரி, புதிதாக தேர்தல் நடத்தினாலும் சரி நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று சுவாமி சங்கரதாஸ் அணியினர் கூறியுள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் தொடர்பாக சுவாமி சங்கரதாஸ் அணியைச் சேர்ந்த ஐசரி கணேஷ், பாக்யராஜ் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், “தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு மாத கால அவகாசம் தொடர்பாக இடைக்கால தடை விதித்திருக்கிறது. தேர்தலை பொறுத்தவரை விஷால் தரப்பினர் தேர்தலுக்கு பயந்து மேல்முறையீடு வழக்குகளை தொடர்ந்து வருகின்றனர். எங்களைப் பொறுத்தவரை நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணினாலும் சரி அல்லது புதிதாக தேர்தல் நடத்தினாலும் சரி சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.

தேர்தல் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளிடம் விஷால் தரப்பினர் எந்த ஆவணங்களையும் இதுவரை ஒப்படைக்காமல் இருக்கின்றனர்.



மேலும் பேசிய ஐசரி கணேஷ்,  “நடிகர் சங்கத்தில் மொத்தம் 600 பேர் ஓய்வூதியம் வாங்கி வருகிறார்கள். இதில் 150 பேருக்கு நான் ஓய்வூதியம் கொடுத்து வருகிறேன். மீதமுள்ள 450 பேர் தேர்தல் நடைபெறாமல் இருப்பதால் ஓய்வூதியம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு ஓய்வு ஊதியம் கிடைப்பதற்காக வழி செய்ய வேண்டும் இல்லை என்றால் அவர்களுடைய முகவரியை கொடுத்தால் நாங்கள் ஓய்வூதியம் வழங்க தயாராக இருக்கிறோம்.

நந்தனத்தில் உள்ள முகவரிக்கு தொடர்பு கொண்டால் ஓய்வூதியம் அவர்களுக்கு கொடுக்கப்படும். கையிருப்பு பணம் எதுவும் இல்லாமல் இருப்பதால் ஓய்வூதியம் கூட வழங்க முடியாத அளவிற்கு எதிர்தரப்பினர் நிர்வாகம் செய்து வருகின்றனர்” என்றார்.

மேலும் படிக்க: மாஸ்டர் ரிலீசில் யாரும் எதிர்பார்க்காத புதிய சிக்கல் - தள்ளிப் போகிறதா ரிலீஸ் தேதி?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: