Home /News /entertainment /

நடிகர் சங்கத்துக்கு புதிதாக தேர்தல் நடத்த பிறப்பித்த உத்தரவுக்குத் தடை - உயர் நீதிமன்றம்

நடிகர் சங்கத்துக்கு புதிதாக தேர்தல் நடத்த பிறப்பித்த உத்தரவுக்குத் தடை - உயர் நீதிமன்றம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு, ஜூன் 23-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், சங்க உறுப்பினர்கள் பலரை நீக்கயது தொடர்பாகவும், தபால் ஓட்டுகள் போட உறுப்பினர்கள் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாகவும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக் காலம் முடிந்த பின்பு எடுத்து எந்த முடிவுகளும் செல்லாது எனவும் அவர் அறிவித்தார்.

மேலும், நடிகர் சங்க உறுப்பினர்களை சரி பார்த்து மீண்டும் வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும், புதிய தேர்தலுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

நடிகர் சங்கத்திற்கான புதிய தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் மூன்று மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் தரப்பில், நடிகர் சங்கத்திற்கு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட தேர்தலுக்காக ரூ.35  லட்சம் செலவு செய்யப்பட்டதாகவும், தேர்தலில் 80 % வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் பல மாதங்களாக வாக்குகள் எண்ணாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையெல்லாம் தனி நீதிபதி கருத்தில் கொள்ளாமல் தேர்தல் ரத்து செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிட வேண்டும், சங்க உறுப்பினர்களை சரி பார்த்து மீண்டும் வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும், புதிய தேர்தலுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் மற்றும் தேர்தல் நடைமுறைகளை 3 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என தனி நீதிபதி பிறபித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

அதே வேலையில், நடிகர் சங்கத்தை தனி அதிகாரி தொடர்ந்து நிர்வகிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக ஏப்ரல் 8 ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.

மேலும் படிக்க: ஹோலி கொண்டாடிய அமிதாப் பச்சன் குடும்பம்: புகைப்படங்களைப் பகிர்ந்த ஐஷ்வர்யா ராய்..!
Published by:Sheik Hanifah
First published:

Tags: Nadigar Sangam

அடுத்த செய்தி