முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / டியூனில் குழப்பம்.. ஏஜெண்ட் மூலம் முயற்சி.. RRR ஆஸ்கர் வெற்றிக்கு பின்னால் இவ்வளவு கதை இருக்கா?

டியூனில் குழப்பம்.. ஏஜெண்ட் மூலம் முயற்சி.. RRR ஆஸ்கர் வெற்றிக்கு பின்னால் இவ்வளவு கதை இருக்கா?

ஆர் ஆர் ஆர்

ஆர் ஆர் ஆர்

Oscar 2023 : ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்திருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. ஆனால் இந்த விருதுக்கு பின்னால் அப்படக்குழுவினரின் முயற்சி பெரிய அளவில் உள்ளது

ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் இசை, வரிகள் மற்றும் நடனம் ஆகியவை திரையரங்கில் ரசிகர்களை நடனம் ஆட வைத்தன.

இந்த பாடல் இந்தியா தாண்டி வெளிநாடுகளிலும் கவனம் எடுத்தது. இது குறித்து பேசிய இயக்குநர் ராஜமெளலி, ஆர்.ஆர்.ஆர் படத்தில் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்ற இடத்திற்காக முதலில் இரண்டு டியூன்களை கீரவாணி உருவாக்கினார். அந்த இரண்டில் எந்த டியூனை வைப்பது என்ற ஒரு குழப்பம் தனக்கு வந்ததாகவும், அப்போது தன்னுடைய மகன் கார்த்திகேயா மற்றும் கீரவாணியின் மகன் பைரவா ஆகியோர் நாட்டு நாட்டு ட்யூனை தேர்வு செய்தனர். குறிப்பாக, இதில் என்ன சந்தேகம்! இந்த டியூன்தான் நன்றாக இருக்கிறது என்று அவர்கள் கூறியதாக, அந்தப் படத்திற்கான நேர்காணல் சமயத்தில் நம்மிடம் தெரிவித்தார். அப்படி தேர்வு செய்யப்பட்ட நாட்டு நாட்டு பாடல் தற்போது ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்படவில்லை. இதன் காரணமாக அப்படக் குழுவினர் Agent மூலமாக நேரடியாக ஆஸ்காருக்கு விண்ணப்பித்தனர். அதற்காக அமெரிக்காவில் பலருக்கு படம் திரையிடப்பட்டது. அங்கு இருந்த ஊடகங்கள் மற்றும் திரை பிரபலங்கள் படத்தை பெருமளவு பாராட்டினர். அப்போது இருந்தே இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் படத்தின் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. அதுவும் வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் யாரும் பணியாற்றாத ஒரு இந்திய திரைப்படத்திற்கு விருது கிடைத்துள்ளது. அது இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட ஆர்.ஆர்.ஆர் படக் குழுவினர் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறது.

First published:

Tags: Oscar Awards