தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பெருங்கலைஞன் - சூர்யாவுக்கு சீமான் வாழ்த்து!

சூர்யா

அன்புத்தம்பி சூர்யா அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன் என சீமான் கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நேற்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலகினர், அரசியல் கட்சியினர், சமூக செயல்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகள் கூறினர். நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சீமான் தனது வாழ்த்துச் செய்தியில்" சூர்யா தனது ஆகப்பெரும் திறமையாலும், அர்ப்பணிப்பு ஈடுபாட்டோடு உழைக்கும் உயரிய செயல்திறனாலும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராக உயர்ந்து, நடிப்புக்கலையால் மட்டுமல்லாது சமூக அக்கறையின் விளைவாகவும், பொதுப்பணிகளின் மூலமாகவும் தமிழ் மக்களின் மனம் கவர்ந்திருக்கின்றன பெருங்கலைஞன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்புத்தம்பி சூர்யா அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன்." என கூறியுள்ளார்.

Also read... சூர்யாவின் 39 வது படத்தின் பெயர் ஜெய் பீம் - பர்ஸ்ட் லுக் வெளியீடு...!

சமீபத்தில் நீட் மற்றும் ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்த சூர்யாவுக்கு எதிராக பாஜகவை சேர்ந்தவர்கள் அவதூறு பேசியபோது, சூர்யா தனி மனிதரல்ல என அவருக்காக சீமான் குரல் கொடுத்திருந்தது முக்கியமானது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: