ஒரே கலரில் டிரஸ்.. ஆசை மகனுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய விஜய் டிவி பிரபலம்!

சீரியல் நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம்

குழந்தையை ஏந்தியபடியும், அவரது மனைவி இருகரம் குவித்தபடியும் போஸ் கொடுத்து உள்ளனர்.

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான "நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2"-வில் போலீஸ் வேடத்தில் நடித்து வருபவர் சீரியல் நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம்.

  ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான "நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1-ல் இவர் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருபவர் ஆவார். நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், பல்வேறு பிரபலங்களும் அவரவர் இல்லங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர் .

  நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம் தனது மனைவி மற்றும் சமீபத்தில் பிறந்த தனது குழந்தையுடன் பிள்ளையார் சதுர்த்தி விழாவை தனது வீட்டில் மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாவில் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ள நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம், "நாயகனோடும்! விநாயகனோடும்!!"என்று கேப்ஷன் கொடுத்து உள்ளார். அந்த போட்டோவில் வீட்டின் சிறிய பூஜை அறையில் நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம் மற்றும் அவரது மாணவி இருவரும் தரையில் அமர்ந்து உள்ளனர். சசிந்தர் புஷ்பலிங்கம் தனது மடியிலும், கையிலும் புதிதாக பிறந்த குழந்தையை ஏந்தியபடியும், அவரது மனைவி இருகரம் குவித்தபடியும் போஸ் கொடுத்து உள்ளனர்.

  தாய், சேய், தந்தை என அனைவரும் ஒரே கலரில் டிரஸ் அணிந்து கொடுத்துள்ள இந்த போட்டோ சோஷியல் மீடியாவில் உள்ள ரசிகர்களின் கவனத்தி பெரிதும் ஈர்த்துள்ளது. இந்த அழகிய போட்டோவிற்கு "வாவ் க்யூட் ஃபேமிலி" என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். முன்னதாக தனக்கு மகன் பிறந்த உற்சாகத்தை "ஆழியிலே அவதரித்த அழகே , அகத்தை ஆட்கொண்ட அன்பே, தாயினுள் தோன்றிய தவமே, தந்தையின் தோளில் சுகமே, பெற்றோரின் பொக்கிஷம் நீ!, வாழ்வின் அர்த்தம் நீ! காதலின் "சகா"ப்தம் நீ! யாவும் நீ! யாதும் நீ!"என்று அழகான தமிழ் கவிதை மூலம் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  Sasindhar Pushpalingam இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sasindhar.p)


  1985-ஆம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி சென்னையில் பிறந்த சசிந்தர் புஷ்பலிங்கம் சன் டிவி-யில் ஒளிபரப்பான வம்சம் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். இதில் இவர் நந்தகுமார் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ள சசிந்தர் 2017-ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான "தமிழ் கடவுள் முருகன்" சீரியலில் சிவன் மற்றும் வீரபத்திரன் வேடத்தில் நடித்தார். இந்த சீரியலில் நடித்ததால் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம். பிறகு சன் டிவி சீரியலான சந்திரகுமாரியில் முகுந்தனாக நடித்தார். ஹிட்டாக ஓடி கொண்டிருக்கும் ரோஜா சீரியலிலும் நடித்து உள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: