Home /News /entertainment /

இளம் விவசாயிகளுக்கு கடைசி விவசாயி படத்தை திரையிட்ட myHarvest farms!

இளம் விவசாயிகளுக்கு கடைசி விவசாயி படத்தை திரையிட்ட myHarvest farms!

கடைசி விவசாயி திரையிடல்

கடைசி விவசாயி திரையிடல்

மைஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ் கடந்த மூன்று வருடங்களாக நஞ்சில்லா காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை இயற்கை முறையில் விவசாயம் செய்து 3000 குடும்பங்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்கள்.

கடைசி விவசாயி படத்தை 60 விவசாயிகளுக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார்கள் சென்னையை சேர்ந்த 'myHarvest farms' குழுவினர்.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய திரைப்படங்களை இயக்கிய மணிகண்டனின் புதிய திரைப்படம் கடைசி விவசாயி. 2018-ல் இந்த படத்திற்கான வேலைகளை தொடங்கினார். பல்வேறு பிரச்னைகள் காரணமாக படப்பிடிப்பு தாமதமானது. படம் தயாரான நிலையில் கொரோனா பெரும்தொற்று காரணமாக படத்தை திரையரங்கில் வெளியிடுவதா இல்லை ஓடிடியில் வெளியிடுவதா என நீண்ட குழப்பத்துக்கு ஆளானார் மணிகண்டன். பின்னர் படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

இதில் விஜய் சேதுபதி, யோகி பாபு, காளிமுத்து, சுந்தர் முனீஸ்வரன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். வயதான ஒரு விவசாயி தான் படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் விவசாய குடும்பத்தினர் அதிலிருந்து விலகி நகரத்தை நோக்கி படையெடுத்ததால், எப்படி விவசாயம் செய்ய வேண்டும் என்பதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டத்தையும் கடைசி விவசாயி படம் சொல்லியிருந்தது.

விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்தப் படத்தை 60 விவசாயிகளுக்கு திரையிட்டுக் காட்டியிருக்கிறது 'myHarvest farms'. யாரிவர் என்கிறீர்களா? சென்னையில் சிறிதளவில் தொடங்கிய மைஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ் கடந்த மூன்று வருடங்களாக நஞ்சில்லா காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை இயற்கை முறையில் விவசாயம் செய்து 3000 குடும்பங்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்கள். அதோடு 150 இளம் விவசாயிகளுடன் இணைந்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள்.

அவர்களை உற்சாகப்படுத்தவும், அழிவு நிலையில் உள்ள விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற உத்வேகம் கொடுக்கவும். ’கடைசி விவசாயி’ படத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு myHarvest Farms’ திரையிட்டு காண்பித்தது.

இதையும் படிங்க - பிரிவுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்தித்த தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... என்ன நடந்தது?

myHarvest farms screened Kadaisi Vivasayi movie for young farmers, kadaisi vivasayi sony liv, kadaisi vivasayi release date ott, kadaisi vivasayi ott, kadaisi vivasayi release date 2021, kadaisi vivasayi songs, kadaisi vivasayi trailer, kadaisi vivasayi ilayaraja, kadaisi vivasayi movierulz, kadaisi vivasayi movie, kadaisi vivasayi review, kadaisi vivasayi myHarvest farms, my harvest archana, my harvest farm essay in english, harvest farms, organic vegetables chennai, organic vegetables home delivery chennai, farm to home chennai, weekend farming in chennai, கடைசி விவசாயி, கடைசி விவசாயி திரைப்படம், கடைசி விவசாயி திரையிடல்

”எங்களுடன் 60 விவசாயிகள் இந்த சிறப்புத்திரையிடலில் பங்கேற்றனர். அதில் 12 பெண் விவசாயிகள் என்பது கூடுதல் சிறப்பு. தமிழகமெங்கும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த விவசாயிகள், பிவிஆர் சினிமாஸ் திரையரங்கில் ’கடைசி விவசாயி’ படத்தை பார்த்ததில் மகிழ்ச்சி,” என்றார் 'myHarvest farms' நிறுவனர் அர்ச்சனா ஸ்டாலின்.

மிஸ் பண்ணிடாதீங்க - ஒரு போஸ்டர் கூட ஒழுங்கா பண்ண தெரியாதா... பொன்னியின் செல்வன் படக்குழுவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

myHarvest farms screened Kadaisi Vivasayi movie for young farmers, kadaisi vivasayi sony liv, kadaisi vivasayi release date ott, kadaisi vivasayi ott, kadaisi vivasayi release date 2021, kadaisi vivasayi songs, kadaisi vivasayi trailer, kadaisi vivasayi ilayaraja, kadaisi vivasayi movierulz, kadaisi vivasayi movie, kadaisi vivasayi review, kadaisi vivasayi myHarvest farms, my harvest archana, my harvest farm essay in english, harvest farms, organic vegetables chennai, organic vegetables home delivery chennai, farm to home chennai, weekend farming in chennai, கடைசி விவசாயி, கடைசி விவசாயி திரைப்படம், கடைசி விவசாயி திரையிடல்

படத்தில் நீதிபதியாக முக்கிய வேடத்தில் நடித்த Dr.ரேச்சல் ரெபெக்கா, துணை இயக்குநர் சரத் மற்றும் படக்குழுவினர் திரையிடலில் கலந்து கொண்டு, வந்திருந்த விவசாயிகளுடன் உரையாடினர். இவர்களுடன் இயக்குனர் வசந்த், பாடகி ரெஹானா, நடிகர் ராஜ்மோகன், பாடகர் ஹரிசரன், பாடகர் நரேஷ் ஐயர், நடிகை VJ ரம்யா, நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

அடுத்த செய்தி