• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எனது பதிவுகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன - ட்விட்டர் நிறுவனம் மீது சித்தார்த் குற்றச்சாட்டு

எனது பதிவுகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன - ட்விட்டர் நிறுவனம் மீது சித்தார்த் குற்றச்சாட்டு

நடிகர் சித்தார்த்

நடிகர் சித்தார்த்

தனது ட்வீட்களை ட்விட்டர் நிறுவனம் இருட்டடிப்பு செய்வதாகவும், தன்னை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு வருடத்துக்கும் மேலாக உயரவில்லை என்றும் பிரபல நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார்.

  • Share this:
இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றி பின்னர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கமல்ஹாசன் உடன் இந்தியன் 2 உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வரும் இவர் நாட்டில் நிலவும் பல்வேறு மக்கள் பிரச்னைகள் குறித்து தொடர்ச்சியாக சமூகவலைதளத்தில் தனது கருத்தை பதிவிட்டு வருகிறார்.

டெல்லியில் தொடர்ந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்த தனது பார்வை, மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவது என ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் சித்தார்த் சமீபத்தில் நாதுராம் கோட்சேவை தீவிரவாதி, கொலையாளி என்று விமர்சித்து ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் தனது பதிவுகளை ட்விட்டர் நிறுவனம் இருட்டடிப்பு செய்வதாகவும், இதுவரை 5 முறை ஹேக் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 16 மாதங்களாக தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை உயரவில்லை என்று கூறியிருக்கும் அவர், தன்னை பின் தொடரும் நபர்கள் தனது ட்வீட்களை பார்க்கமுடியவில்லை என்றும் தானாகவே அவர்கள் அன்ஃபாலோ செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.



தனது குற்றச்சாட்டுகளை எழுதி அதை ட்விட்டர் இந்தியா நிறுவனத்துக்கு நடிகர் சித்தார்த் டேக் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: