எனது மெழுகு சிலையை பார்த்த முதல் நபர் என் கணவர் தான் - நடிகை காஜல் அகர்வால் பூரிப்பு! 

எனது மெழுகு சிலையை பார்த்த முதல் நபர் எனது கணவர் தான் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கவுதம் கிட்ச்லு கடந்த 2020 பிப்ரவரி 4-ம் தேதி இரண்டு மணி நேரம் தன்னோடு சிங்கப்பூருக்கு விமானத்தில் பறந்ததை காஜல் தனது சமூக ஊடக பதிவில் நினைவுக் கூர்ந்துள்ளார்.

எனது மெழுகு சிலையை பார்த்த முதல் நபர் எனது கணவர் தான் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கவுதம் கிட்ச்லு கடந்த 2020 பிப்ரவரி 4-ம் தேதி இரண்டு மணி நேரம் தன்னோடு சிங்கப்பூருக்கு விமானத்தில் பறந்ததை காஜல் தனது சமூக ஊடக பதிவில் நினைவுக் கூர்ந்துள்ளார்.

 • Share this:
  சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை பெற்ற முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையை பெற்றவர் நடிகை காஜல் அகர்வால். மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உலக அரசியல் தலைவர்கள் முதல் ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் வரை பல முன்னணி நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்களின் மெழுகுச்சிலைகள் வைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. மேலும் பாலிவுட் நடிகைகளில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஐஸ்வரயா ராய், அனுஷ்கா சர்மா, பிரியங்கா சோப்ரா, முன்னனி நடிகர்களான ஷாருக்கான், நடிகர் மகேஷ் பாபு ஆகியோரின் சிலைகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

  இந்நிலையில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வடிவமைக்கப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி திறக்கப்பட்டது. தனது மெழுகு சிலையை நடிகை காஜல் அகர்வாலே திறந்து வைத்தார். இந்த நிலையில், காஜல் அகர்வால் இன்று அந்த நிகழ்வின் ஒரு த்ரோபேக் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதனுடன் ஒரு சுவாரஸ்யமான உண்மையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அப்போது காதலனாக இருந்த தனது கணவர் கவுதம் கிட்ச்லு, சிலை திறப்புக்கு முன்னதாக தனிப்பட்ட முறையில் காஜல் மற்றும் காஜலின் மெழுகு சிலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  எனது மெழுகு சிலையை பார்த்த முதல் நபர் எனது கணவர் தான் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கவுதம் கிட்ச்லு கடந்த 2020 பிப்ரவரி 4-ம் தேதி இரண்டு மணி நேரம் தன்னோடு சிங்கப்பூருக்கு விமானத்தில் பறந்ததை காஜல் தனது சமூக ஊடக பதிவில் நினைவுக் கூர்ந்துள்ளார். அந்த பதிவில் பிப்.5-ம் தேதி தொழில்முறை பயணமாக அவர் ஜெர்மனி செல்ல வேண்டியிருந்தது. அந்த சமயம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அவரது கண்கள் என்னை மட்டும் நோக்கியது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

  காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த தொழில் அதிபரான கவுதம் கிட்ச்லுவை காதலித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். மும்பையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் இவர்களுக்கு திருமணம் நடந்தது. காஜல் அகர்வால் 'இந்தியன் 2' படத்தில் கமிட்டாகி உள்ளார். இதில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'இந்தியன் 2' படத்தில் வயதான பாட்டி வேடத்தில் நடிக்கும் அவர் தனது கதாபாத்திரத்திற்காக தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
  Published by:Ram Sankar
  First published: