சுசாந்த் சிங் தற்கொலை... பாலிவுட்டில் திறமைசாலிகள் புறக்கணிப்படுவதாக பிரபலங்கள் குற்றச்சாட்டு

நடிகை ரவீனா டாண்டன், இயக்குநர் அபினவ் சின்ஹா

 • Share this:
  பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையை தொடர்ந்து, நடிகை ரவீனா டாண்டன், இயக்குநர் அபினவ் சின்ஹா உள்ளிட்ட பிரபலங்கள், இந்தி திரையுலகில் ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளனர்.

  சுஷாந்த் சிங்கின் தற்கொலையை அடுத்து, கடந்த இரண்டு நாட்களாக பாலிவுட் திரையுலகில் நிலவும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் குறித்தும், உண்மையான திறமைசாலிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

  இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள தபாங் திரைப்பட இயக்குநர் அபினவ் சிங் காஷ்யப், சல்மான் கானின் குடும்பத்தால் தனது திரைப்பட வாய்ப்புகள் பறிக்கப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

  https://www.facebook.com/askashyap/posts/10158865186991844

  அதேபோல ஆளவந்தான் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை ரவீனா டாண்டனும், பாலிவுட்டில் மோசமான அரசியல் இருப்பதாகவும், திறமைசாலிகள் மறைக்கப்படுவதாகவும் டிவீட் செய்துள்ளார்.


  தொடர்ந்து டிவிட்டரிலும் #JusticeForSushantSinghRajput என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

  Also see... அழகோ அழகு அவள் கண்ணழகு... சுனைனாவின் கியூட் போட்டோஸ்!

  பிக்பாஸ் முகேன் ராவின் ரீசென்ட் போட்டோஸ்
  Published by:Vinothini Aandisamy
  First published: