சமீப காலமாகவே OTT தளங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அதிலும், கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு புதிய படங்கள் பல தற்போது OTT தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் மாஸ் ஹீரோ படங்கள், குடும்ப பாங்கான படங்கள், நகைச்சுவை படங்கள், கிரைம், திரில்லர் என அனைத்து ஜானர்களிலும், மொழிகளிலும் படங்கள் குவிந்து இருக்கின்றன. அதிலும், கொரோனா பரவலை அடுத்து வீட்டில் இருந்தே வேலை என்ற நடைமுறை வந்ததால், அனைவரும் பொழுதுபோக்கிற்காக படங்களை காண விரும்புவார்கள். மேலும் சிலர் திரில்லர் படங்களை காண மிகவும் ஆர்வத்துடன் இருப்பார்கள். அவர்களுக்காவே இங்கு நாங்கள் சிறந்த த்ரில்லர் படங்களின் பட்டியலை வழங்கியுள்ளோம்.
1. ராட்சசன்: டிஸ்னி + ஹாட்ஸ்டார்
முண்டாசுபட்டி புகழ் ராம்குமார் இயக்கிய ராட்சசன் திரைப்படம் இன்றுவரை சிறந்த தமிழ் திரில்லர் திரைப்படங்களில் ஒன்றாக திகழ்கிறது. தொடர்ச்சியாக சிறுமிகள் காணாமல் போவதும் பின்னர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதும் என்ற திகிலுடன் திரைக்கதை தொடங்குகிறது. சிறுமிகள் எங்கு போகிறார்கள் அவர்களை யார் இப்படி செய்வது என்பதை கண்டறிந்து சைக்கோவை கொலை செய்வது தான் கதை களம்.
2. 8 தோட்டக்கள் : டிஸ்னி + ஹாட்ஸ்டார்
1949 ஆம் ஆண்டு ஜப்பானிய திரைப்படமான ஸ்ட்ரே டாக்ஸால் ஈர்க்கப்பட்டு இந்த படம் இயக்கப்பட்டுள்ளது. சத்யா என்ற நேர்மையான போலீஸ்காரரின் கதையைப் பற்றியது. ஒரு குற்றவாளியை கைது செய்யும் போது தற்செயலாக தனது சேவை துப்பாக்கியை இழக்கிறான். இருப்பினும், கைத்துப்பாக்கியைத் திருடிய திருடன் அதை மற்றொருவருக்கு விற்கிறான், அவன் ஒரு கொலைவெறிக்கு செயலை செய்கிறான். இந்த சிக்கலில் இருந்து நாயகன் எவ்வாறு விடுபடுகிறார் என்பதே கதைக்களம்.
3. கேம் ஓவர் : நெட்ஃபிக்ஸ்
இந்த படம் இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, அனைத்து காட்சிகளும் இந்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் படமாக்கப்பட்டன. கேமை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரில்லர் படம் இறுதி காட்சிகள் வரை திகைக்க வைப்பதாக இருக்கிறது. பி.டி.எஸ்.டி நோயால் அவதிப்பட்டு தனது வீட்டு வேலைக்காரியுடன் தனியாக வசிக்கும் கேம் டிசைனரான ஸ்வப்னா (டாப்ஸி பன்னு) என்பவரின் கதைதான் இது. ஆனால், ஒரு தொடர் கொலையாளி தனது வீட்டிற்குள் நுழைந்தபின் அவள் வாழ்க்கை தலைகீழாக மாறி, உயிர் பிழைப்பதற்காக ஒரு கொடூரமான விளையாட்டை விளையாட வேண்டியிருக்கிறது.
4. கைதி : டிஸ்னி + ஹாட்ஸ்டார்
கோலிவுட்டில் 2019ம் ஆண்டு தீபாவளி வெளியீடாக கைதி படம் ரிலீசானது. OTT தளத்தில் இந்த படம் தெலுங்கு டப்பிங்கிலும் கிடைக்கிறது. இந்த படம் இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் குற்றவாளியான டில்லி, சிறையை விட்டு வெளியேறிய பிறகு முதல் முறையாக தனது மகளை சந்திக்க முயற்சிக்கிறார். எவ்வாறாயினும், இன்ஸ்பெக்டர் பெஜோய் திட்டமிட்ட போதைப்பொருள் சோதனை காரணமாக அவரது முயற்சிகள் தடைபடுகின்றன.
5. இரும்புத்திரை : டிஸ்னி + ஹாட்ஸ்டார்
இரும்புத்திரை என்பது சைபர் கிரைம் பற்றிய கதை. ஒரு இராணுவ அதிகாரி தனது சகோதரியின் திருமணத்திற்காக வங்கியில் இருந்து கடன் வாங்குகிறார். ஆனால், பணம் காணாமல் போகும்போது, அவர் அதை விசாரணை செய்த போது தான் தெரிகிறது அது சைபர் கிரைம் மோசடி என்று. சைபர் குற்றவாளிகளின் கும்பலை அவர் எவ்வாறு வீழ்த்துகிறார் என்பது தான் மீதமுள்ள கதை.
6. பாபநாசம் : டிஸ்னி + ஹாட்ஸ்டார்
ஜீது ஜோசப் இயக்கிய மலையாள த்ரில்லர் த்ரிஷ்யத்தின் ரீமேக் தான் பாபநாசம். இது தமிழில் சிறந்த ரீமேக் செய்யப்பட்ட படமாக விளங்குகிறது. கமல்ஹாசன் மற்றும் கவுதமி ஆகியோரின் அற்புதமான நடிப்பு, கதாபாத்திரங்களுடன் நம்மை ஜெல் ஆக்குகின்றன. மேலும் குடும்பத்தை காபாற்ற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் 180 நிமிடங்கள் நம்மை இருக்கையில் கட்டிப்போட்டு வைக்கிறது. பாபநாசம் ஒரு சிறந்த தமிழ் திரில்லர் திரைப்படங்களில் ஒன்றாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cinema, Entertainment, OTT Release, Tamil Cinema