தனது நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனை, ஒப்பந்தங்கள் தொடர்பாக யுவன் வெளியிட்ட அறிக்கை

தனது நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனை, ஒப்பந்தங்கள் தொடர்பாக யுவன் வெளியிட்ட அறிக்கை

யுவன் சங்க்ர்ராஜா

தனது நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனை மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக யுவன்சங்கர்ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 • Share this:
  தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன்சங்கர்ராஜா தயாரிப்பு நிறுவனம் மற்றும் இசை நிறுவனத்தை சமீபத்தில் தொடங்கினார். முதல் தயாரிப்பாக ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் வெளியானது.

  அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதியின் மாமனிதன், ரைசா வில்சன் நடிப்பில் ‘ஆலிஸ்’ உள்ளிட்ட ஒரு சில படங்களைத் தயாரித்தார். இதில் ‘மாமனிதன்’ திரைப்படத்தை பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்ததால் அத்திரைப்படம் வெளியாவது தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் தனது நிறுவனங்கள் குறித்து ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கும் யுவன் சங்கர்ராஜா, “நான் பணம் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக யாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை. அப்படி என் பெயரிலோ எனது நிறுவனத்தின் பெயரிலோ யாராவது பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டாலோ அல்லது ஒப்பந்தம் மேற்கொண்டாலோ அதற்கு நான் பொறுப்பாக முடியாது.  என்னைத் தவிர ஒய் எஸ் ஆர் பிரைவேட் ஃபிலிம்ஸ் மற்றும் யுஐ ரெக்கார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் பணப்பரிவர்த்தனை செய்ய அதிகாரம் இல்லை. எனது நிறுவனங்களின் சார்பில் இதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு யுவன் சங்கர்ராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
  Published by:Sheik Hanifah
  First published: