ஷங்கர் படத்துக்கு முதல்முறையாக இசையமைக்கும் தமன்!

ஷங்கர், தமன், ராம்சரண்

ஷங்கர் படத்துக்கு முதல்முறையாக இசையமைக்கும் வாய்ப்பு, இசையமைப்பாளர் தமனுக்கு கிடைத்துள்ளது.

 • Share this:
  முதல் படம் ஜென்டில்மேன் தொடங்கி இந்தியன் 2 வரை ஷங்கர் இயக்கிய படங்களில் மூன்று படங்கள் தவிர்த்து அனைத்திற்கும் ரஹ்மானே இசையமைப்பாளர். அந்நியன், நண்பன் இரு படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். பாதியில் நிற்கும் இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசை. ரஹ்மான் என்ற கோட்டையைத் தாண்டி ஷங்கரை ஒரு இசையமைப்பாளர் நெருங்குவது கடினம். ரஹ்மானின் தேதி பிரச்சனை காரணமாக இரு வாய்ப்புகள் ஹாரிஸுக்கு கிடைத்தன. கமல் காரணமாக ஒரு வாய்ப்பு அனிருத்துக்கு கிடைத்தது.

  இந்நிலையில், ராம் சரணை வைத்து ஷங்கர் தெலுங்கில் இயக்கும் படத்துக்கு யார் இசையமைப்பார்கள் என்ற கேள்வி இருந்தது. அனிருத், தமன் என இரு பெயர்கள் அடிபட்டன. இதில் தமனை பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தியவர் ஷங்கர். இப்போது அவர் தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர். பவன் கல்யாண் தொடங்கி மகேஷ்பாபு வரை முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அவர்தான் இசையமைக்கிறார். நமக்கு யுவன் எப்படியோ அப்படி தெலுங்கு சினிமாவுக்கு தமன்

  Also Read : சூர்யா 40 பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதியை அறிவித்த சன் பிக்சர்ஸ்.. ரசிகர்கள் உற்சாகம்

  அனிருத்தா, தமன்-னா என்ற போட்டியில் ஜாக்பாட் அடித்தது தமனுக்கு. ஷங்கர் - ராம் சரண் படத்துக்கு தமனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் படத்தின் நாயகன் ராம் சரணும், தயாரிப்பாளர் தில் ராஜுவும் ஷங்கரை சென்னை வந்து சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து படவேலைகள் சுறுசுப்படைந்தன. தில் ராஜு தயாரிக்கும் 50 வது படம் என்பதால் பிரமாண்டமாக இந்தப் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: