பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக இறுதி வாரத்தை எட்டியுள்ளது. இதுவரை 12 பேர் வெளியேறியுள்ள நிலையில் தற்போது ஆரி, ரியோ, பாலாஜி, சோம், ரம்யா, கேபி ஆகிய 6 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் மகிழ்ச்சி, நெகிழ்ச்சியடைந்த தருணங்கள் குறித்து பேசுமாறு பிக்பாஸ் கூறினார். இதனையடுத்து அனைவரும் தங்களது சிறப்பான தருணங்கள் குறித்து உணர்வுபூர்வமாக பேசினர்.
ஆரி, பாலாஜி கடந்த வாரம் சேவ் செய்யப்பட்டது குறித்தும் சோம் டிக்கெட் டு பினாலே வெற்றி பெற்றது குறித்தும் பேசினர். ரியோ தனது மனைவி வருகை குறித்து பேசினார். ரம்யா கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் சிங்கப்பெண்ணே பாடல் போட்டபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக தெரிவித்தார். பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே நடிகர் ஆரிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிக்பாஸ் பார்வையாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஆரியைப் புகழ்ந்துவருகின்றனர்.
எனவே, பிக்பாஸ் டைட்டிலை ஆரி வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் நட்பு அடிப்படையில் ஆரிக்காக ‘ஆரி வேற மாறி’ என்ற லிரிக்கல் இசை ஆல்பத்துக்கு இசை அமைத்துள்ளார் சி.சத்யா. ‘ஆரி வேற மாறி’ சிங்கிள் டிராக் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியாகி உள்ளது. ஆரி ஏற்கனவே சி.சத்யா இசையமைத்த ‘நெடுஞ்சாலை’ ‘உன்னோடு கா’ படத்தில் நாயகனாக நடித்தவர். தற்போது இந்த கூட்டணி ‘அலேகா’ படத்திலும் இணைந்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.