ஆப்பிள் வாட்ச்க்கு பதிலாக கற்களை அனுப்பிய ஃப்ளிப்கார்ட் - பிரபல இசையமைப்பாளர் அதிர்ச்சி

ஆப்பிள் வாட்ச்க்கு பதிலாக கற்களை அனுப்பிய ஃப்ளிப்கார்ட் - பிரபல இசையமைப்பாளர் அதிர்ச்சி

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்

ஆன்லைனில் பொருள் ஆர்டர் செய்து ஏமாற்றப்பட்டது குறித்து இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ‘விக்ரம் வேதா’, ‘கைதி’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் சாம்.சி.எஸ். இவர் ஃபிளிப்கார்டில் ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்து, தான் ஏமாற்றப்பட்டதாக தனது சமூகவலைதள பக்கத்தில் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

  இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் கூறியுள்ளதாவது, “என் சகோதரரின் பிறந்தநாளுக்கு பரிசாக கொடுக்க ஆப்பிள் வாட்ச் ஒன்றை ஃபிளிப்கார்டில் ஆர்டர் செய்திருந்தேன். ஆர்டர் கைக்கு கிடைத்து திறந்து பார்த்தபோது அதிர்ச்சியானோம். அதில் கற்களை மிக அழகாக பேக் செய்து அனுப்பியிருந்தார்கள்.

  இதுகுறித்து ஃபிளிப்கார்ட் நிறுவனத்திடம் புகார் தெரிவித்த போது எங்களின் புகாரை நிராகரித்து பணத்தைத் திருப்பித் தரமுடியாது என்றனர். எனவே ஃபிளிப் கார்டில் பொருட்களை வாங்காதீர்கள். அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள்” என்று கூறியுள்ளார்.  சாம்.சி.எஸ் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு ஃபிளிப்கார்ட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட பதிலில், “மன்னித்துவிடுங்கள். உங்களது வருத்தத்தை புரிந்து கொள்கிறோம். ஆர்டர் ஐடியை எங்களுக்கு அனுப்புங்கள். உங்களுக்கு நாங்கள் வழிகாட்டுகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
  Published by:Sheik Hanifah
  First published: