• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இளையராஜாவின் பாடலில் நோய் எதிர்ப்பு சக்தி - பாகுபலி பட இசையமைப்பாளர் வீடியோ

இளையராஜாவின் பாடலில் நோய் எதிர்ப்பு சக்தி - பாகுபலி பட இசையமைப்பாளர் வீடியோ

இசையமைப்பாளர் இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா

  • Share this:
    இளையராஜாவின் பாடலைப் பாடினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று இசையமைப்பாளர் கீரவாணி வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

    கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. திரைத்துறை பிரபலங்கள் பலரும் வீட்டில் இருந்தபடியே சமூகவலைதளங்களின் வாயிலாக விழிப்புணர்வு வீடியோக்களையும், தங்களது கருத்துகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பாகுபலி படத்தில் இசையமைப்பளராக பணியாற்றிய கீரவாணி வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இனிப்புகள் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்று சொன்னார்கள். எனவே இனிப்புகளை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டேன். அதற்குப் பதிலாக இளையராவின் பாடல் ஒன்றைப் பாடினால் அதிலிருக்கும் இனிமை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்” என்று கூறி தேனே தென்பாண்டி மீனே என்ற இளையராஜாவின் பாடலையும் பாடியுள்ளார் கீரவாணி.



    இந்த வீடியோ சமூகவலைதளத்தில் பலரது கவனத்தைப் பெற்று வருகிறது. பாகுபலி படத்தைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் ‘ரத்தம் ரணம் ரௌத்திரம்’ படத்திலும் கீரவாணி இசையமைப்பாளராக பணிபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க: கமல்ஹாசனின் அலுவலகத்தில் கொரோனா நோட்டீஸ்... கவுதமியின் முகவரியால் நிகழ்ந்த குழப்பம்...!



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: