எங்கள் விவேக் இல்லை என்ற உண்மையை ஏற்க என் இதயம் நம்ப மறுக்கின்றது - டி.இமான்!

நடிகர் விவேக்

ஒரு அசாதாரண கலைஞரையும், மனிதனையும் நாம் இழந்தோம், அவரது குடும்பத்திற்கு எனது மனமார்ந்த இரங்கல் என்றும் இமான் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  எங்கள் விவேக் இல்லை என்ற உண்மையை ஏற்க என் இதயமும் ஆத்மாவும் நம்ப மறுக்கின்றது என்று இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார்.

  நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீர் என மயங்கி விழுந்ததால், சென்னை வடபழனியிலுள்ள சிம்ஸ் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார்.

  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்து வந்த நிலையில் நேற்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பின் போது மருத்துவமனை நிர்வாகம் 24 மணி நேரம் கழித்தே உறுதியாக தெரிவிக்கமுடியும் என்று விளக்கம் அளித்திருந்தது.

  Also read... நடிகர் விவேக் காலமானார்

  இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக ட்விட்டரில் தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் டி.இமான், எங்கள் விவேக் இல்லை என்ற உண்மையை ஏற்க என் இதயமும் ஆத்மாவும் நம்ப மறுக்கின்றது என்று இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார்.  மேலும், ஒரு அசாதாரண கலைஞரையும், மனிதனையும் நாம் இழந்தோம், அவரது குடும்பத்திற்கு எனது மனமார்ந்த இரங்கல் என்றும் இமான் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: