Home /News /entertainment /

அஜித் 60: முதலாவது வெளியான மாஸ் அப்டேட்!

அஜித் 60: முதலாவது வெளியான மாஸ் அப்டேட்!

அஜித் குமார்

அஜித் குமார்

அஜித்தின் 60-வது பட  இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான படம் விஸ்வாசம். சிவா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று அஜித்தின் கேரியரிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக அமைந்தது.

இந்தப் படத்தை அடுத்து இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் இணைந்தார் அஜித். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தை எச்.வினோத் இயக்குகிறார். யுவன்சங்கர் ராஜா படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் நிலையில் அஜித்தின் 60-வது படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்குகிறார். அஜித்துக்காக எழுதப்பட்ட சொந்தக் கதையை ஆக்‌ஷன் படமாக பிரமாண்டமாக உருவாக்கவும் படத்தின் இயக்குநர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



முன்னதாக நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின் போது அஜித்தை ஜிப்ரான் சந்தித்திருந்தார். அதற்கான புகைப்படத்தையும் ஜிப்ரான் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் அந்த பதிவில் அஜித் தன்னிடம் இணைந்து பணியாற்றலாம் என்று கூறியதாக பதிவிட்டிருந்தார். அதனால் அஜித்தின் 60-வது படத்தில் ஜிப்ரான் இணைந்திருப்பது உறுதியாகியுள்ளது.



இதற்கு முன்னதாக எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் ஜிப்ரான் பணியாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

படிக்க: பிக்பாஸ் 3: கலந்துகொள்ளும் 3 திரை நட்சத்திரங்கள்!

வீடியோ பார்க்க: நான் பேசுவது புரியவில்லை என்றால், என்னுடைய ஹேராம் படத்தை பாருங்கள் - கமல்

Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor Ajith, Ajith 60

அடுத்த செய்தி