ஏ.ஆர்.முருகதாஸ் இன்னும் சில வாரங்களில் முருகதாஸின் அடுத்தப்பட ஹீரோ யார், துப்பாக்கி இரண்டாம் பாகத்தின் நிலை என்ன என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரலாம். News18 Last Updated : June 21, 2021, 17:43 IST விஜய் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு தள்ளிப்போன நிலையில், துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை தூசிதட்டுகிறார் முருகதாஸ்.
விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய முதல் படம் , துப்பாக்கி . முருகதாஸின் திரைவாழ்க்கையில் துப்பாக்கி முக்கிய படமாக அமைந்தது . ரமணா , கஜினியைவிட கச்சிதமான கதையும் , திரைக்கதையும் , பாடல்களும் , சண்டைக் காட்சிகளும் துப்பாக்கியில் இயல்பாக அமைந்திருந்தன .
அதனைத் தொடர்ந்து கத்தி , சர்க்கார் படங்களை முருகதாஸ் இயக்கினார் . இந்த இரு படங்களும் கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கின . சர்க்கார் படப்பிரச்சனை நீதிமன்றம்வரைச் சென்று முருகதாஸின் இமேஜை பெருமளவு டேமேஜ் செய்தது . முருகதாஸின் கடைசிப் படம் தர்பாரும் சரியாகப் போகவில்லை . வணிகரீதியாக ஓகே என்றாலும் , படைப்புரீதியாக படம் யாரையும் கவரவில்லை .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தர்பாருக்கு அடுத்து விஜய் யை இயக்குவதாகத்தான் இருந்தார் முருகதாஸ் . ஆனால் , அவர் சொன்ன கதை விஜய்க்கு திருப்தியாக அமையவில்லை . நெல்சன் திலீப்குமாருக்கு கால்ஷீட் தந்தார் . இதன் பிறகே முருகதாஸ் ராமை இயக்குகிறார் இல்லை கமல் , மகேஷ்பாபு இருவரை வைத்து இயக்குகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன . ஆனால் , முருகதாஸ் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதுவதில் பிஸியாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
Also read... Samuthirakani: பாலிவுட்டிற்குச் செல்லும் சமுத்திரக்கனி படம்!
இந்த இரண்டாம் பாகத்தை விஜய்க்கு ஏற்றபடி இல்லாமல் கமலுக்குப் பொருந்தும்படி அவர் எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது . இன்னும் சில வாரங்களில் முருகதாஸின் அடுத்தப்பட ஹீரோ யார் , துப்பாக்கி இரண்டாம் பாகத்தின் நிலை என்ன என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரலாம் .
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by: Vinothini Aandisamy
First published: June 21, 2021, 17:43 IST