Home /News /entertainment /

தந்தையின் மூன்றாவது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது வழக்கு - போலீஸ் விசாரணை

தந்தையின் மூன்றாவது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது வழக்கு - போலீஸ் விசாரணை

பாலியல் வழக்கு

பாலியல் வழக்கு

"இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 மற்றும் 380 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது"

    தந்தையின் மூன்றாவது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    58 வயதான மாற்றாந்தாயை பாலியல் பலாத்காரம் செய்து, 78 வயதான தந்தையின் வீட்டிலிருந்து ரொக்கம் மற்றும் நகைகளை திருடியதாக 40 வயது தொலைக்காட்சி நடிகர் மீது ஓஷிவாரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    பாதிக்கப்பட்டவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையிலான சொத்து தகராறு குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் அளித்த பெண் அந்தேரி (மேற்கு) நகரில் உள்ள லோகண்ட்வாலா வளாகத்தில் வசிப்பவர் எனவும் தொலைக்காட்சி சீரியல் இயக்குநரின் மூன்றாவது மனைவி எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குற்றம்சாட்டப்பட்டவரின் தந்தையின் மூன்றாவது மனைவி.

    தனது வளர்ப்பு மகன், வீட்டிற்கு வந்து தான் தனியாக இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். அதோடு அலமாரியில் இருந்த தனது நகைகளை அவர் திருடியதாகவும் அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பாதிக்கப்பட்டவர் அறிக்கையின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட டிவி நடிகர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் திருட்டு வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். "இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 மற்றும் 380 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று ஓஷிவாரா காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பெண்ணின் புகாரை அவர்கள் இன்னும் சரிபார்த்துக் கொண்டிருப்பதால், போலிசார் இதுவரை குற்றம்சாட்டப்பட்டவரை இன்னும் கைது செய்யவில்லை. "பாதிக்கப்பட்ட பெண் அவரது கணவர் மற்றும் வளர்ப்பு மகன் மூவருக்கும் இடையே இருந்த சொத்து தகராறு காரணமாக இப்படியான புகார் வந்ததா என்று நாங்கள் விசாரிக்கிறோம்” என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த பெண் வசிக்கும் வீடு மற்றும் அந்தேரியில் இருந்த நான்கு கடைகள் சம்பந்தமாக தகராறு இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து "விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன. குற்றச்சாட்டுகளை சரிபார்த்த பின்னரே நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய முடியும்" என ஓஷிவாரா காவல் நிலைய மூத்த ஆய்வாளர் சஞ்சய் பந்தலே கூறினார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Rape case

    அடுத்த செய்தி