• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Kangana Ranaut: கதைத் திருட்டு புகாரில் கங்கனா ரனவத் மீது வழக்கு...!

Kangana Ranaut: கதைத் திருட்டு புகாரில் கங்கனா ரனவத் மீது வழக்கு...!

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

இந்திரா காந்தி வாழ்க்கை வரலாறுடன் கங்கனா அறிவித்த இன்னொரு படம், மணிகர்னிகா இரண்டாம் பாகம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கதைத் திருட்டு புகாரில் நடிகை கங்கனா ரனவத் மீது மும்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார் கங்கனா.

இந்தியின் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனவத், மணிகர்னிகா - தி குயின் ஆஃப் ஜான்சி திரைப்படத்தில் நடித்திருந்தார். 2019 இல் இத்திரைப்படம் வெளியானது. முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், வேறு இருவருடன் இணைந்து இத்திரைப்படத்தை இயக்கியுமிருந்தார். இதையடுத்து இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறை எமர்ஜென்ஸி என்ற பெயரில் இயக்கி, நடிப்பதாகவும் தெரிவித்திருந்தார். மோடி ஆதரவாளரான அவரது இந்த அறிவிப்பும், படத்தின் பெயரும் எதிர் தரப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்திரா காந்தி வாழ்க்கை வரலாறுடன் கங்கனா அறிவித்த இன்னொரு படம், மணிகர்னிகா இரண்டாம் பாகம் (Manikarna Returns: The Legend of Didda). இதில் அவர் கஜினி முகமதுவுடன் போரிட்ட காஷ்மீர் மகாராணி (Queen Didda) வேடத்தில் நடிக்கிறார். Queen Didda கிபி 973 முதல் கிபி 1003 வரை காஷ்மீர் நிலப்பரப்பை ஆண்டவர். தனது 26 வது வயதில் பார்வகுப்தா என்ற அரசனின் மகனை மணந்து கொண்டார். அவர்களுக்கு அபிமன்யூ என்ற மகன் உண்டு.

தனது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் 64 திருக்கோவில்களை இவர் கட்டியதாக கூறப்படுகிறது. அத்துடன், பதவி வெறி பிடித்தவர், அதிகாரத்துக்காக எந்த படுபாதகச் செயலையும் செய்ய அஞ்சாதவர், தனது 3 பேரன்கள் நந்திகுப்தா, த்ரிபுவனா, பீமகுப்தா ஆகியோர்களை பதவிக்காக கொலை செய்தவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு. கஜினி முகமதுவை எதிர்த்து போரிட்டவர் என்பதால், அவரை கொண்டாடும்விதமாக மணிகர்னிகா இரண்டாம் பாகத்தை எடுக்க கங்கனா ரனவத் திட்டமிட்டிருந்தார்.

Also read... Yogi Babu: யோகி பாபு, மிர்ச்சி சிவா - மீண்டும் இணைந்த சிரிப்புக் கூட்டணி...!

இந்தக் கதை தான் எழுதிய Didda: The Warrior Queen of Kashmir புத்தகத்தை தழுவி கங்கனா எழுதியிருப்பதாக புத்தகத்தின் ஆசிரியர் ஆசிஷ் கௌல் புகார் தர, அதனடிப்படையில் போலீசார் கங்கனா மீது வழக்குப் பதிவு செய்தனர். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் கங்கனா மற்றும் அவரது சகோதரர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், படத்தை தாங்கள் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. எந்த அடிப்படையும் இல்லாமல் போடப்பட்ட வழக்கு இது என தெரிவிக்கப்பட்டுள்ளது

சரித்திர கதையை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால், இந்த வழக்கில் கங்கனா விடுவிக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: