ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகர் சோனு சூட் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு

நடிகர் சோனு சூட் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு

நடிகர் சோனு சூட்

நடிகர் சோனு சூட்

கொரோனா காலக்கட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தங்குவதற்காக இந்த குடியிருப்பு ஹோட்டலாக பயன்படுத்தப்பட்டது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    கொரோனா காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பலருக்கு உதவி செய்த நடிகர் சோனுசூட் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கொரோனா காலத்தில் பலருக்கு சேவை செய்து ரியல் ஹீரோ என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர் நடிகர் சோனு சூட். ஏழை மக்களுக்கு உதவி செய்ய தன்னுடைய 10 கோடி ரூபாய் சொத்துக்களை அவர் அடமானம் வைத்திருந்த தகவலையடுத்து அனைவரது மனதிலும் நீங்கா இடம்பெற்றார் சோனு சூட்.

    இந்நிலையில் மும்பையில் உள்ள அவரது 6 மாது குடியிருப்பு பகுதியை அனுமியின்றி ஹோட்டலாக மாற்றியதாக கூறி  நடிகர் சோனு சூட் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை நடிகர் சோனு சூட் மறுத்துள்ளார்.

    கொரோனா காலக்கட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தங்குவதற்காக இந்த குடியிருப்பு ஹோட்டலாக பயன்படுத்தப்பட்டது. நான் எப்போதும் சட்டத்தை மீறுபவன் இல்லை, இதற்காக மாநகராட்சி உரிய அனுமதி பெற்றுள்ளேன் என்று சோனு சூட் கூறியுள்ளார்.

    மேலும் இந்த புகாரை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என்றும் அவர் கூறி உள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் நடிகர் சோனு சூட் இந்த குடியிருப்பு பகுதியில் பலரை தங்க வைத்து உணவு, உடை உள்ளிட்ட பல உதவிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Published by:Vijay R
    First published:

    Tags: Sonu sood