• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தோனி இல்லாத டி-20 அணி: பிசிசி-ஐக்கு விக்னேஷ் சிவன் கண்டனம்

தோனி இல்லாத டி-20 அணி: பிசிசி-ஐக்கு விக்னேஷ் சிவன் கண்டனம்

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

டி-20 அணியில் தோனி பெயர் இடம்பெறாதது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கருத்து தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    டி-20 அணியில் தோனி பெயர் இடம்பெறாதது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கருத்து தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியிருக்கும் நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி-20 போட்டி, மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்கும் இந்திய அணி குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.

    இந்நிலையில் தோனியின் ரசிகரான பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் பிசிசிஐக்கு கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், " தலைவன் தோனி இல்லாத இந்திய டி-20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்க்க இதயம் உடைந்தது போல் உள்ளது. மோசமான தேர்வுக்குழு, ஆண்டவன் தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: