முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Agilan Review: பசிக்கு பின்னால் இருக்கும் அரசியல்.. எப்படி இருக்கிறது அகிலன்? இதோ விமர்சனம்!

Agilan Review: பசிக்கு பின்னால் இருக்கும் அரசியல்.. எப்படி இருக்கிறது அகிலன்? இதோ விமர்சனம்!

அகிலன்

அகிலன்

Agilan Movie Review: ஜெயம்ரவி நடிப்பில் அகிலன் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. ஹார்பரை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.

  • News18
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் அகிலன் படத்தை எடுத்துள்ளார். இதில் ஜெயம்ரவியுடன் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிசந்திரன், ஹரிஸ் பெரேடி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒரு ஹார்பர், அங்கு இருக்கும் கடத்தல் கும்பல், சோதனை அதிகாரிகளின் செயல்பாடுகள், அதில் இருக்கும் அரசியல் ஆகியவற்றை சுற்றியே திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.

ஹார்பரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பரத்தாமனிடம் கடத்தல் உள்ளிட்ட  குற்ற வேலைகளை நாயகன் அகிலன் செய்கிறான். ஒரு கட்டத்தில் அவனிடம் இருந்து வெளியேறி அதே ஹார்பரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான் அகிலன். எந்த விஷயம் வைரலாக வேண்டும், தனக்கு யார் எதிரியாக, துரோகியாக இருக்க வேண்டும் என்பதையும் அவனே முடிவு செய்கிறான். இதனால் இருவருக்கும் பகை உருவாகிறது, ஹார்பரில்  சட்டவிரோத வேலைகள் அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் கோகுல் என்ற அதிகாரி திணறுகிறார். இதற்கு பின் நடிக்கும் சம்பவங்களும் காரணங்களுமே அகிலன் திரைப்படம்.

இந்தப் படத்தில் ஹார்பரை கதைகளமாக எடுத்துகொண்டு, அதன் பின்னால் நடக்கும் வியாபர கொள்ளை மற்றும் அதனால் உலக முழுவதும் உள்ள சாதாரண மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்ற அரசியலை சொல்ல இயக்குனர் முயற்சித்துள்ளார். அதாவது சாதாரண மக்கள் பயன்படுத்தும் வெங்காய விலை முதல் பங்கு சந்தை வியாபாரம் வரை அனைத்தையும் நிர்ணயம் செய்யவது Sea Traffic என கூறியுள்ளார்.

உலக மக்களின் பசியை நிர்ணயம் வியாபாரத்தின் அரசியலை சொல்ல முயற்சித்தாலும், அதை அழுத்தமாக சொல்லாமல் விட்டுவிட்டனர். அதை மையப்படுத்தி கதையும், காட்சிகளையும் எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதைவிட்டுவிட்டு ஹார்பார், அதில் நடக்கும் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துளனர்.

அகிலனின் இரண்டாம் பாதியில் தீவிரமான கதை உள்ளது. அதற்குதான் முதல் பாதியின் காட்சிகள் கட்டமைக்கப்படுகின்றன. அதற்காகவே அகிலன், பரந்தாமன், கோகுல், கபூர் காட்சிகள் விவரிக்கப்படுகின்றன. இதனால் பரபரப்பான காட்சிகளுடன் சில ஆழமான அரசியல் இருக்குமோ என்று தோன்றலாம். ஆனால் இரண்டாம்பதியில் தமிழன்னை என்ற ஒன்றை நோக்கி கதை நகர்கிறது. அதில் துரோகம் என்ற இலக்கிலேயே கதை எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவுக்கு பக்கத்தில் உள்ள தீவு என ஈழ பிரச்னையை மேலோட்டாமாக தன் கதைக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளார் இயக்குனர். ஆனால் இரண்டாம் பாதி மிக நீளமாக தோன்றுகிறது. அதேபோல் அழுத்தமான காட்சிகளும் இல்லை.

அகிலனில் தான் சொல்ல நினைத்த அரசியல் மற்றும் நிலைபாட்டை ஏதோ ஒரு இடத்தில்சமரசம் செய்துகொண்டுள்ளார் இயக்குனர் கல்யாண். அதன் காரணமாகவே படம் மேலோட்டமாக எடுக்கப்பட்டுள்ளது.

இதில் அகிலனாக வரும் ஜெயம் ரவி வழக்கம்போல் தன்னுடைய பணியை சிறப்பாக செய்துள்ளார். ஆனால் நாயகிகளான பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிசந்திரன் ஆகியோருக்கு முக்கியத்துவம் இல்லை. அதேபோல் மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.

அகிலன் திரைப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டலாம். குறிப்பாக ஒளிப்பதிவு, பின்னணி இசை ஆகியவை சிறப்பாக உள்ளன. ஹார்பர் காட்சிகளை மிக பிரமாண்டமாக காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளரின் பணி சிறப்பானது. அதேபோல் சாம்.சி.எஸ் தன்னால் முடிந்த வரை காட்சிகளின் தன்மையை வலுப்படுத்த தன் இசையால் முயற்சித்துள்ளார்.

உலக மக்களின் பசிக்கு பின்னால் இருக்கும் அரசியல், தமிழன்னை, ஹார்பர் அரசியல் உள்ளிட்டவற்றை சுமந்து வந்த அகிலன் என்ற கப்பல், நங்கூரம் இல்லாமல் தடுமாறுகிறது. நேரத்தை குறைத்திருந்தால் வேறு வழியில் வெற்றிகரமாக இலக்கை அடைந்திருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Jayam Ravi, Movie review, Priya Bhavani Shankar