ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மூவி டைம்: ஜன்னல் வழியாக ஒரு திகில்.. பதற வைக்கும் த்ரில்லர் 'Watcher' மூவி!

மூவி டைம்: ஜன்னல் வழியாக ஒரு திகில்.. பதற வைக்கும் த்ரில்லர் 'Watcher' மூவி!

வாட்சர் மூவி

வாட்சர் மூவி

படம் ஸ்லோவாக தொடங்கினாலும் போகப்போக சூடுபிடிக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மூவி டைம்: த்ரில்லர் விரும்பிகளுக்கு நன்கு தீனி போடும் படமாக வெளிவந்ததுதான் Watcher

Watcher திரைப்படம் இந்த ஆண்டு வெளியான சைக்கலாஜிகள் த்ரில்லர் திரைப்படம் ஆகும். இப்படத்தை ஜோலோ ஒகுனா என்பவர் இயக்கியுள்ளார். இதில் மைகா மொன்ரோ, கார்ல் லுஸ்மான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். பக்கா சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாக்கப்பட்ட இப்படம் நிச்சயம் த்ரில்லர் விரும்பிகளுக்கு பிடிக்கும்

Also Read: மூவி டைம்: Memories of Murder! கற்பழிப்பு கொலைகள்! 33 ஆண்டுகள்.. போலீசாரை அலறவைத்த சீரியல் கில்லரின் கதை!

ஸ்பாய்லர் இல்லாத கதை..

படத்தின் நாயகி தன் காதல் கணவருடன் புது ஊரில் புது ப்ளாட்டில் குடியேறுகிறார். அந்த ஊரின் மொழி நாயகிக்கு தெரியாது என்பதால் மொழியைக் கற்றுக்கொண்டு இருக்கிறார். இதற்கிடையே வேலையே கதியென்று கணவர் கிடக்க நாயகி மட்டுமே தனியாக வீட்டில் இருக்கிறார். எப்போதுமே இரவில் தங்களை ஒருவர் பக்கத்து ஜன்னலில் இருந்து பார்ப்பதை நாயகி பார்க்கிறார். சாதாரணமாக முதலில் இருந்தாலும் போகப்போக அது வேறு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஜன்னல் வழியாக பார்க்கும் நபர் யார்? அவரால் ஏதேனும் பிரச்னை உண்டாகிறதா? அந்த இடத்தில் நடக்கும் ஷாக் சம்பவங்கள் என்ன என த்ரில்லருக்கே உரிய பல விஷயங்களை வைத்திருக்கிறது Watcher.

' isDesktop="true" id="818182" youtubeid="PJoq995vAFE" category="movie-reviews">

படம் ஸ்லோவாக தொடங்கினாலும் போகப்போக சூடுபிடிக்கிறது. அடுத்து என்னவென்ற எதிர்பார்ப்பு நம்மை படமோடு பயணிக்க வைக்கிறது. நாயகியாக நடித்துள்ள மைகா மொன்ரோ சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காட்சிக்குகாட்சி பயத்தை நமக்குள் கடத்தும் அளவான சிறந்த நடிப்பு. நாயகியின் கணவர், பக்கத்து வீட்டு தோழி, ஜன்னல் வழியாக பார்க்கும் நபர் என அனைவருமே தேவையான நடிப்பையே வெளிப்படுத்தியுள்ளனர். படத்துக்கு இசை முக்கிய பலமாக அமைகிறது. ஒரு நல்ல த்ரில்லரை பார்க்கவேண்டுமென்றால் நிச்சயம் Watcher மூவி பார்க்கலாம்.

Published by:Murugadoss C
First published:

Tags: Hollywood