முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Cobra Movie Review: கணிதத்தை மையாக கொண்டு எடுக்கப்பட்ட விக்ரமின் கோப்ரா படம் எப்படி இருக்கிறது?

Cobra Movie Review: கணிதத்தை மையாக கொண்டு எடுக்கப்பட்ட விக்ரமின் கோப்ரா படம் எப்படி இருக்கிறது?

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

Cobra Movie Review: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார்.

கோவையில் ஒடிசா மாநில முதலமைச்சரும், ஸ்காட்லாந்தில் இளவரசரும் கொல்லப்படுகிறார்கள். அந்த இரண்டு கொலைக்கும் தொடர்பு இருப்பதாக கணித்தில் அதீத ஞானம் கொண்ட சென்னை மாணவி மீனாட்சி Interpol-க்கு தகவல் கொடுக்கிறார். அவர்கள் ஏன் கொல்லப்படுகிறார்கள்? அதன் பின் இருக்கும் காரணம் என்ன? எப்படி அந்த கொலைகள் நிகழ்த்தப்பட்டன என்பது போன்ற கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக மீதி கதை நகர்கிறது.

கோப்ராவில் கணிதத்தை மையாக கொண்டு கொலைகள் என்று விசாரணை தொடங்குகிறது. இதன் பின் நிச்சயம் திரைக்கதையில் புதுமையும், விறு விறுப்புக்கும் பஞ்சம் இருக்காது என்ற ஆவலை தூண்டுகிறது. ஆனால் காதல், செண்டிமெண்ட் என படத்தின் திரைக்கதை திரும்புகிறது. இருந்தாலும் பல காட்சிகள் தனித் தனியாக ரசிக்க வைக்கின்றன.

இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் Interpol அதிகாரியாக நடித்துள்ளார். அவர்தான் கணிதத்தை கொண்டு நடைபெறும் கொலைகளை கண்டுபிடிப்பார் என்ற தோன்றுகிறது. ஆனால் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. மீனாட்சியின் உதவியாளர் போல படம் முழுக்க செயல் படுகிறார். Interpol அதிகாரிகள் இப்படியா இருப்பார்கள் என தோன்ற வைக்கிறது.

கணித மேதையாக வரும் விக்ரம் திட்டமிட்டு நடத்தும் இரண்டு சம்பவங்கள் ரசிக்க வைக்கின்றன. ஆனால் மற்ற காட்சிகளில் புதுமை இல்லை. அதற்கான அதிக மெனக்கெடலை எடுக்க தவறியுள்ளனர். இருந்தாலும் பல தோற்றங்களில் நடித்துள்ளார். அவர் எப்போதும் போல நடிப்பில் ஸ்கோர் செய்து கடந்து செல்கிறார்.

இந்தப் படத்தில் இடம்பெறும் காட்சிகளை படமாக்க இயக்குனர் அதிக கவனம் செலுத்தியுள்ளார். ஆனால் அந்த காட்சிகளை சுவாரஸ்யமாக எடுக்க தவறி, மேலோட்டமாக எழுதியுள்ளார். அதனால் சிட்டிசன், பட்டியல் உள்ளிட்ட பல தமிழ் படங்களை நினைவுப்படுத்துகின்றது. மேலும் வில்லனுக்கும் நாயகனுக்கும் இடையேயான மோதலுக்கு வலுவான காரணம் இல்லை. அத்துடன் இர்பான் பதானுக்கும் விக்ரமுக்கும் இடையே போட்டியும் இல்லை.

Also read... Natchathiram Nagargirathu Twitter review: எப்படி இருக்கிறது நட்சத்திரம் நகர்கிறது படம்? - ட்விட்டர் விமர்சனம்!

கோப்ரா திரைப்படம் 3 மணி நேரம் 3 நிமிடம் ஓடுகிறது. அது படத்திற்கு மிகபெரிய மைனஸ். அதேபோல் மதி கதாபாத்திரத்தின் மனநிலை குறித்த காட்சிகள் ஒரு கட்டத்தில் பொறுமையை சோதிக்கின்றன. இந்தப் படத்தில் கான்செப்டை தவிர புதுமை எதுவும் இல்லை என்றாலும், 40 நிமிட காட்சிகளை குறைத்திருந்தால், நிச்சயம் சுவாரஸ்யமா அமைந்திருக்கும்.

கோப்ராவில் ஒளிப்பதிவு அழகாகவும், பின்னணி இசை நேர்த்தியாகவும் அமைந்துள்ளன. அதேபோல் விக்ரமை தவிர இர்பான் பதான் ஸ்ரீநிதி, மிருணாளினி ரவி ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளன. அதேபோல் மீனாட்சி கோவிந்தராஜன் சில இடங்களில் ஓவராகவும், சில இடங்கள் ஓகேவாகவும் நடித்துள்ளார்.

அதீத சுவாரஸ்யமாக எடுத்திருக்க வேண்டிய கதையை, மிக சாதாரணமாக படமாக்கியுள்ளனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Vikram, Cobra Movie, Movie review