Home /News /entertainment /

The Legend Movie Review: லெஜெண்ட் படம் எப்படி இருக்கிறது?

The Legend Movie Review: லெஜெண்ட் படம் எப்படி இருக்கிறது?

தி லெஜண்ட்

தி லெஜண்ட்

The Legend Movie Review: சண்டைக் காட்சிகளிலும் நடனத்திலும் தேர்ச்சி பெற்ற சரவணன், வசன காட்சிகளிலும் செண்டிமெண்ட் காட்சிகளிலும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். 

  • News18
  • Last Updated :
தொழிலதிபர் சரவணன் நாயகனாக நடித்திருக்கும் லெஜெண்ட் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வந்துள்ளது. இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

உலக அளவில் பல்வேறு சாதனைகளை செய்த தலைசிறந்த விஞ்ஞானி சரவணன், பிறந்த ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சிவாஜி பட ரஜினிகாந்த் பாணியில்  அமெரிக்காவிலிருந்து நாடு திரும்புகிறார். அதற்குபிறகு அவர் வாழ்க்கையில் நடைபெறும் அதிரடி சம்பவங்களே லெஜெண்ட்.

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நாயகிகளுடன் நடனமாடி தன்னுடைய கடையை பிரபலப்படுத்தி வந்தவர் தொழிலதிபர் சரவணன். அந்த விளம்பர படங்களை ஜெடி - ஜெர்ரி ஆகியோர் இயக்கி வந்தனர்.  இவர்கள் மூவரும்  இணைந்து லெஜெண்ட் திரைப்படத்தை எடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து சொந்த ஊர் திரும்பும் சரவணன், தன் திறமையை மக்களுக்கு பயன்படுத்த நினைக்கிறார். அதாற்கான விஷயத்தை தேடுகிறார். அப்போது தன்னுடைய பள்ளி நண்பன் குடும்பம் முழுவதும் சர்க்கரை நோய்யால் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிகிறார். சர்க்கரை நோய்க்கு இன்சுலின் தீர்வல்ல. ஒரே மருந்தில் அந்த நோய்யை குணப்படுத்த வேண்டும் என முடிவெடுக்கிறார். அந்த முடியு அவர் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது? அவர் சந்திக்கும் துரோகம் என்ன என்பதை மெடிக்கல் மாஃபியா பின்னணியில் இந்தப் படத்தை எடுக்க  முயற்சித்துள்ளனர்.

முதல் 30 நிமிடங்கள் காதல், காமெடி, பாடல், சண்டை என நகர்கிறது. அதன் பிறகே படத்தின் மைய கதைக்குள் செல்கின்றனர்.
மெடிக்கல் மாஃபியா, அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்கள், அதை அரங்கேற்றும் நபர்கள் பற்றி இன்னும்  ஆழமாக கூறியிருக்கலாம். ஆனால் அந்த காட்சிகள் மேலோட்டமாக அமைந்து படத்திற்கு வலு சேர்க்கவில்லை. திரைக்கதையும் பல கோணங்களில் நகர்வதால் படத்துடன் நாம் ஒன்ற முடியாத சூழல் ஏற்படுகிறது. சில சமயம் படம் எதை நோக்கி செல்கிறது என கேட்க வைக்கிறது.

லெஜெண்ட் படத்தில் சரவணன் நாயகனாக அறிமுகமாவதால், படத்தில் நடிப்பவர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரையும் பிரபலமானவர்களாக தேர்வு செய்துள்ளனர். அந்த வகையில் பிரபு, மறைந்த நடிகர் விவேக், விஜயகுமார், சுமன்,  யோகிபாபு, ரோபோ சங்கர் உள்ளிடவர்கள் நடித்துள்ளனர். அதில் நடிகர் விவேக் காலமானதால், படப்பிடிப்பில் பதிவு செய்தப்பட்ட அவரின் குரலையே படத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.

நடிகர்களை தவிர ஒளிப்பதிவுக்கு வேல்ராஜ், ஹாரிஷ் ஜெயராஜ் ஆகியோரை பயன்படுத்தியுள்ளனர். அவர்களின் பங்களிப்பு படத்திற்கு பெரும் உதவி செய்துள்ளது.

லெஜெண்ட் படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ள சரவணன் சண்டைக்காட்சிகளிலும், நடனத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார். குறிப்பாக முன்னணி நடிர்களில் இடம்பெறும் அளவிற்கு இந்தப் படத்திலும் சண்டைக்காட்சிகள் உள்ளன. அதை சிறப்பாகவே செய்துள்ளார். ஆனால் வசனக்காட்சிகளிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் அவர் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

Also read... பாரதிராஜா நடிக்கும் படத்தை இயக்கும் தங்கர் பச்சன்

இருந்தாலும் பல விமர்சனங்கள் தன்னை நோக்கி வைக்கப்பட்டாலும், அவற்றை கண்டுகொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் நடித்துள்ளார் சரவணன். அத்துடன் பல இடங்களில் தன்னம்பிக்கை வசங்களையும் பேசுகிறார்.
இந்தப் படத்தில் பல  நடிகர்கள் இருந்தாலும், அவர்களுக்கான காட்சிகள் குறைவுதான். அதேபோல் விவேக், யோகிபாபு, விஜய் டிவி பிரபலங்களான அமுதவானன், யோகி ஆகியோர் இருந்தும் நகைச்சுவை இல்லை.

இது தன்னுடைய முதல் படமாக இருந்தாலும் முன்னணி நாயகர்களின் தரத்திற்கு உருவாக்க அதிகம் செலவழித்துள்ளார் சரவணன். அது ஜெடி - ஜெர்ரி எடுத்துள்ள  காட்சிகளில் தெரிகிறது. ஆனால் கதையில் அவர்கள் இன்னும் கவனம் செலுத்தி சுவாரஸ்யப்படுத்திருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment, Legend Saravanan, Movie review

அடுத்த செய்தி