தலைவி எப்படி இருக்கிறது? - வெளியானது முதல் விமர்சனம்!

தலைவி

படத்தை இந்தியின் முன்னணி விமர்சகர்களில் ஒருவரான தரண் ஆதர்ஷ் பார்த்து, படம் குறித்து எழுதியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தலைவி படம் செப்டம்பர் 10 நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில், படத்தைப் பார்த்த பிரபல விமர்சகர் படம் குறித்து எழுதியுள்ளார்.

.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனவத், அரவிந்த்சாமி நடித்திருக்கும் தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை எதற்கும் அஞ்சாத பெண்மணியாக இதில் காட்டியிருக்கிறார் விஜய். அஜயன் பாலா, விஜயேந்திர பிரசாத் தலைவியின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தலைவி இந்தி, தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது. பெல்பாட்டத்தைத் தொடர்ந்து இந்தியில் திரையரங்கில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படம் தலைவி என்பதால், படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. படத்தை இந்தியின் முன்னணி விமர்சகர்களில் ஒருவரான தரண் ஆதர்ஷ் பார்த்து, படம் குறித்து எழுதியுள்ளார்.

தலைவி ஒரு வரி விமர்சனம் என்று, "பவர்ஃபுல்" என எழுதியிருப்பவர், படத்துக்கு நான்கு ஸ்டார்கள் தந்துள்ளார். "இந்தியில் வெளியான மிகவும் பவர்ஃபுல் பயோபிக்கில் தலைவியும் ஒன்று. அழுத்தமான உணர்வுகள், பாராட்டத்தக்க நடிப்பு, கங்கனா ரனவத், அரவிந்த்சாமியின் விருது பெறக்கூடிய நடிப்பு முக்கியமான அம்சம்" என கூறியுள்ளார். மொத்தத்தில் படம் சிறப்பாக இருப்பதாக அவரது விமர்சனம் கூறுகிறது.

Also read... ஜீத்து ஜோசப் படத்தை மீண்டும் தொங்கலில்விட்ட மோகன்லால்...!

தலைவி நாளை மறுநாள் திரையரங்கில் வெளியாகிறது. நாளை விஜய் சேதுபதியின் லாபம் திரைக்கு வருகிறது. ரசிகர்களை இந்தப் படங்கள் திரையரங்குகளுக்கு அழைத்து வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Published by:Vinothini Aandisamy
First published: