பேட்ட மரண மாஸ்...! ட்விட்டர் விமர்சனம்

Web Desk | news18
Updated: January 10, 2019, 4:45 PM IST
பேட்ட மரண மாஸ்...! ட்விட்டர் விமர்சனம்
பேட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்த்
Web Desk | news18
Updated: January 10, 2019, 4:45 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இன்று வெளியாகியுள்ள பேட்ட  படம் குறித்து ட்விட்டரில் பல விமர்சனங்கள் வந்துள்ளன.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘பேட்ட’. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ‘காளி’ என்ற கதாபாத்திரத்திலும் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி ‘ஜித்து’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

அதேபோல் த்ரிஷா, ‘சரோ' என்ற கதாபாத்திரத்திலும், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், ‘சிங்கார் சிங்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ‘மாலிக்’ என்ற கதாபாத்திரத்தில் சசிக்குமாரும், ‘மைக்கேல்’ என்ற கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹாவும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பேட்ட படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து ட்விட்டரில் பல விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.



பேட்ட படம் 90-களில் பிறந்த ரசிகர்களுக்கு  சிறப்பான விருந்தாக அமைந்துள்ளது என்று ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Loading...
கடந்த 12 வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் தரமான நடிப்பை பேட்ட படத்தில் காண முடிந்தது என்றும் ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.



இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் கொடுத்த வாக்கினை காப்பாற்றியுள்ளார் என்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.





பேட்ட படத்தை பற்றி ஒரு வார்த்தையில சொல்லனும்னா படம் மரண மாஸ் என்கிறார்கள் ரசிகர்கள்



90-களில் பிறந்தவர்கள் தாங்கள் சிறு வயதில் பார்த்த சூப்பர் ஹீரோவை பல வருடங்கள் கழித்து பார்த்துள்ளதாக மகிழ்ச்சியில் உள்ளனர் ரஜினி ரசிகர்கள்.



பேட்ட படத்தில் ஒவ்வொறு காட்சியும் வேற லெவல் மாசாக உள்ளது என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

Also see...

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்