Home /News /entertainment /

Sunny - துயரங்களின் இருளில் நம்பிக்கையின் ஒளிக்கீற்று!

Sunny - துயரங்களின் இருளில் நம்பிக்கையின் ஒளிக்கீற்று!

சன்னி

சன்னி

மலையாளம் என்றதும் பகத் பாசிலை மட்டும் நினைவுகூர்கிறோம். அவருக்கு இணையான நடிகர் ஜெய்சூர்யா. இந்த வருடம் வெளியான வெள்ளம், சன்னி படங்களில் மனிதர் பின்னியிருக்கிறார். 

  • News18
  • Last Updated :
சன்னி சென்ற மாதம் 23 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. ஜெய்சூர்யா நடித்திருந்தார். ரஞ்சித் சங்கர் இயக்கம். மாதம் ஒரு நல்ல படமாவது மலையாளத்திலிருந்து வந்துவிடும். சென்ற மாதம் கானேக்கானே, சன்னி என இருபடங்கள். 

சன்னி கொரோனா பெருந்தொற்று காலத்தில் நடக்கும் கதை. குவைத்தில் இருந்து கொச்சி வரும் சன்னி ஏழு தினங்கள் தனிமையில் தன்னை குவாரன்டைன் செய்து கொள்ள வேண்டும். அதற்காக ஹோட்டல் ஹயாத்தில் தங்குகிறான். யாரையும் சந்திக்கவோ, வெளியிலோ செல்ல முடியாது. முழுமையான தனிமை. தொலைபேசி மூலமாக நடக்கும் சின்னச் சின்ன உரையாடல்கள் மூலம் சன்னியின் வாழ்க்கையை இயக்குனர் சொல்கிறார்

இசைக்கலைஞனான சன்னி தனது காதலுக்காக தனது கனவை கைவிட்டவன். தொழில் பார்ட்னரான நண்பன் ஏமாற்றிவிடுகிறான். பெரும் கடன். திருமண உறவில் விரிசல், வாழ்வில் திரும்பிச் செல்வதற்கான எல்லா வாசல்களும் அடைபட்ட ஒருவனின் மனநிலையை முதல் காட்சியிலிருந்து ஆரவாரம் இல்லாமல் சொல்கிறது படம்.தனது பயணப்பையை திறந்து, பொருள்களை எடுக்கும்விதத்தில் சன்னியின் விட்டேத்தியான மனதை அறிகிறோம். கொண்டு வந்த மது தீர்ந்த பிறகு போதையில்லாமல் நாட்களை நகர்த்த வேண்டிய கட்டாயம். ஆரம்ப உக்கிரத்துக்குப் பிறகு மனம் தணிகிறது. தொலைபேசி வழியாக மருத்துவர் இராலி மனநலத்துக்கான சிகிச்சை அளிக்கிறார். உடல்நிலை எப்படி இருக்கிறது என்று முகம் தெரியாத காவல்துறை அதிகாரி அவ்வப்போது போன் செய்து விசாறாக்கிறார். எதிர்பாராதவிதமாக மேல்தளத்தில் சன்னி போலவே குவாரன்டைனில் இருக்கும் இளம்பெண்ணுடன் அறிமுகமாகிறது.

யார், என்ன செய்கிறாய் என்பதான சாதாரண அறிமுக உரையாடல். சில தினங்கள் கழித்து சன்னி அங்கிருந்து வெளியேறும் போது இந்த நபர்களும், அவர்கள் மூலமாக நடந்த உரையாடல்களும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றை அவனுக்குள் செலுத்தியிருக்கிறது. எப்படி இது சாத்தியமானது என்பதே இந்தப் படத்தின் ஆச்சரியம்

சன்னி என்ற ஒரேயொரு நபரை வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கலாம். வம்படியாக அப்படி எதுவும் செய்யாமல், டாக்சி டிரைவர், ரிசப்ஷனிஸ்ட், ரூம்பாய், மேல்தளத்தில் இருக்கும் பெண், ஸ்வாப் பரிசோதனைக்கு வரும் மருத்துவ பணியாளர் என சிலர் படத்தில் வருகிறார்கள். மொத்தமாக ஓரிரு நிமிடங்கள் இருக்கலாம்.படத்தின் பிரதான விஷமே மதுதான். அது மட்டும் கிடைத்திருந்தால் சன்னி தனது துயரங்களுடன் முழுநேர போதையில் ஆழ்ந்திருப்பான். அது கிடைக்காத போது, மற்றவர்களுடன் உரையாட வேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் அவர்கள் சொல்வதையாவது கேட்க வேண்டியிருக்கிறது. அதுவும் சாதாரண உரையாடல். அதன் மூலம் அவன் பெறும் வெளிச்சம், ரஞ்சித் சங்கரின் திரைக்கதைக்கும், இயக்கத்துக்கும் கிடைத்த வெற்றி

2013 இல் புண்ணியாளன் அகர்பத்திகள் படத்தின் மூலம் ரஞ்சித் சங்கர் - ஜெய்சூர்யா கூட்டணி அமைந்தது. ஜெய்சூர்யாவை தனி நாயகனாக நிலைநிறுத்திய படம் அது. அந்தப் படத்தில் ஜெய்சூர்யா தனக்கான இயக்குனரை கண்டுகொண்டார். தொடர்ந்து சு..சு... சுதி வாத்மீகம், பிரேதம், ஞான் மேரிக்குட்டி ஆகிய படங்களில் ரஞ்சித் சங்கரின் இயக்கத்தில் நடித்தார். ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரமும், கதைக்களனும் கொண்டவை. ஞான் மேரிக்குட்டியில் ஜெய்சூர்யா திருநங்கையாக நடித்திருந்தார். படத்துக்குப் படம் நடிப்பு மெருகேறியது. சன்னியில் உச்சம் தொட்டிருக்கிறார்மலையாளம் என்றதும் பகத் பாசிலை மட்டும் நினைவுகூர்கிறோம். அவருக்கு இணையான நடிகர் ஜெய்சூர்யா. இந்த வருடம் வெளியான வெள்ளம், சன்னி படங்களில் மனிதர் பின்னியிருக்கிறார்

சன்னி பார்க்கையில் அதற்கு இணையாக நினைவுக்கு வந்த படம் லாக். ஸ்டீவன் நைட் இயக்கத்தில் டாம் ஹார்டி நடிப்பில் 2013 இல் வெளியானது. இதில் டாம் ஹார்டியின் பெயர் ஐவன் லாக். இரவு அவர் காரில் ஏறுவதிலிருந்து படம் தொடங்கும். காரை ஓட்டிக் கொண்டு அவர் பேசும் போன் உரையாடல் மூலம் அவர் யார், அவரது பிரச்சனை என்ன என்பது தெரிய வரும். திருமணத்தை மீறிய உறவு உள்பட பல விஷயங்களில் இரண்டு படத்துக்கும் ஒற்றுமை உண்டு.

Also read... சூர்யாவின் ஜெய் பீம் வெளியீட்டு தேதி அறிவிப்பு...!

ஐவன் லாக் என்ற அந்த ஒரு கதாபாததிரம் தவிர்த்து லாக்கில்  வேறு நடிகர்கள் இல்லை.எனில், லாக் படத்தின் இன்ஸ்பிரேஷனா சன்னி? இல்லை. இன்ஸ்பிரேஷனாக இருந்தாலும் லாக் போன்ற ஒரு படத்தில் இன்ஸ்பையர் ஆகி சன்னி போன்ற ஒரு படத்தை எடுக்க மேதமை வேண்டும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி