ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

”இது படம் இல்லை.. படிப்பினை” - சர்தார் படத்துக்கு ரிவ்யூ கொடுத்த சீமான்!

”இது படம் இல்லை.. படிப்பினை” - சர்தார் படத்துக்கு ரிவ்யூ கொடுத்த சீமான்!

சர்தார் பற்றி சீமான் விமர்சனம்

சர்தார் பற்றி சீமான் விமர்சனம்

ஒளிப்பதிவு, இசை, பிண்ணனி இசை, உரையாடல் எல்லாமே மிகச்சிறப்பாக வந்துள்ளது. தம்பி கார்த்தி இரட்டை வேடத்தில் ரொம்ப நேர்த்தியாக நடித்துள்ளார் என சீமான் பாராட்டி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அக்டோபர் மாதம் 21-ம் தேதி தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த படம் 'சர்தார்'. இதில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

  சமூக அக்கறைக்கொண்ட கதையை மையப்படுத்தி இந்த படம் அமைந்துள்ளது.மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

  இந்த படத்தை பற்றி பலரும் விமர்சித்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தை பார்த்து விட்டு, இந்த படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது. ”இது ஒரு படம் இல்லை படிப்பினை” என்று தான் சொல்ல வேண்டும். இந்த கருத்தை வலியுறுத்தி நான் பேசியிருக்கிறேன்.தண்ணீர் இன்றைக்கு வியாபார பொருளா மாற்றப்பட்டுவிட்டது. இந்த படம் அதனை மிக ஆழமாக விளக்கி சொல்கிறது.

  Read More : தயாராகிறது சர்தார் 2.. ப்ரோமோவை வெளியிட்ட படக்குழு!

  தம்பி மித்ரன் மற்றும் லட்சுமணக்குமார் தரமான படத்தை கொடுத்துள்ளனர். ஒளிப்பதிவு, இசை, பிண்ணனி இசை, உரையாடல் எல்லாமே மிகச்சிறப்பாக வந்துள்ளது. தம்பி கார்த்தி இரட்டை வேடத்தில் ரொம்ப நேர்த்தியாக நடித்துள்ளார் என பாராட்டி தெரிவித்துள்ளார்.

  ரசிகர்கள் மத்தியில் சீமான் அவர்களின் இந்த கருத்து வைரலாகி வருகிறது. இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Actor Karthi, Seeman