சசிகுமார், ப்ரீத்தி அஸ்வதி, யஷ்பால் ஷர்மா, புகழ் உள்ளிட்டோர் நடிப்பில் மந்திர குமார் இயக்கத்தில் உருவகியுள்ள படம் 'அயோத்தி'. இதற்கு பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதை எழுதியுள்ளார். சமூகத்தில் மனிதமே சிறந்தது என்ற கருத்தை முன்வைத்து அயோத்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் இந்து மத நம்பிக்கையின் மீது முழு ஈடுபாடுடன் வசிப்பவர் யஷ்பால் ஷர்மா. மனைவி, மகள், மகன் ஆகியோரை அடிமைத்தனத்துடன் நடத்துகிறார். அவருக்கும் அவர் மீது கடும் பயம். இந்த சூழலில் ஒரு தீபாவளி பண்டிகையை அன்று அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு குடும்பத்துடன் புனித யாத்திரை வருகிறார் யஷ்பால். அங்கு சென்று வந்தால் தன் கணவர் மாறிவிடுவார் என்று அவரின் மனைவி அஞ்சு அஸ்ரானி நினைக்கிறார். அந்த பயணத்தில் மதுரையில் ராமேஸ்வரம் செல்லும் வழியில் பயணம் செய்யும் கார் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் யஷ்பால். அப்போது நிகழும் விபத்தில் அவரின் மனைவிக்கு தலையில் பலத்த அடிப்பட்டு மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துவிடுகிறார். மத அடிப்படையில் இறுதி சடங்கு செய்ய வேண்டும் என யஷ்பால் சர்மா கூறுகிறார். அதனால் உடற்கூறாய்வு செய்ய கூடாது என மருதுவர்கள், காவல்துறையினர் என அனைவருடனும் சண்டையிடுகிறார். அதற்கு பின் என்ன நடக்கிறது என்பதே அயோத்தி.
மொழி தெரியாத ஊர், இறந்துபோன அம்மா, கட்டுமிராண்டி அப்பா என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார் நாயகி. அவரின் நிலையை பார்த்து நாயகன் சசிகுமார் உதவுகிறார். இறந்த உடலை அயோத்தி அனுப்ப பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. யார் என்றே தெரியாத குடும்பம், பெயரே சொல்லமல் உதவும் நாயகன் ஆகியோரை சுற்றியே கதை எழுதப்பட்டுள்ளது.
மதநம்பிக்கையின் மீது தீவிர பற்றுக்கொண்ட யஷ்பால் கதாபாத்திரம் மிகவும் நேர்த்தியாக வடிவமமைக்கப்பட்டுள்ளது. அவரின் கதாபத்திரம் சிலரை நினைவுபடுத்தலாம் அல்லது யோசிக்க வைக்கலாம். மிகவும் சர்ச்சையான, சவாலான அந்த கதாபாத்திரத்தை எந்த பிரச்னைக்குள்ளும் மாட்டிக்கொள்ளாதபடி நியாயம் செய்துள்ளனர்.
இந்தப் படத்தின் கதை உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. அதனால் சினிமாத்தனம் கொண்ட காட்சிகளை பெரும்பாலும் தவிர்த்துவிட்டனர். மனித நேயம், மத நல்லிணக்கத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வியாபாரத்தில் 10 ரூபாய் விட்டுகொடுக்காமல் ஒருவரை அசிங்கப்படுத்தும் யஷ்பாலுக்கு, பல ஆயிரம் ரூபாயை பெயரை தெரியாத நபர்கள் உதவுகின்றனர்.
அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரையிலான பயணத்தில் உணர்வுபூர்வமான காட்சிகள் பல உள்ளன. மதத்தை தாண்டி நிற்கும் மனிதமே முக்கியம், அதுவே சிறந்தது என்பதை துணிச்சலுடன் சொல்லியுள்ளனர். குறிப்பாக, படத்தின் இறுதி காட்சி யாரும் எதிராராதது. அந்த காசிக்கு ரசிகர்கள் பலரும் கை தட்டி பாராட்டுகின்றனர்.
இதில் நடித்துள்ள சசிகுமார், யஷ்பால் சர்மா, ப்ரீத்தி, அஞ்சு என அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். அதேபோ என்.ஆர்.ரகுநந்தன் இசையும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
அயோத்தி படத்தில் ஆங்காங்கே இந்தி வசனங்கள், லாஜிக் தாண்டிய சம்பவங்கள் என பல குறைகளும் உள்ளன. ஆனால் மதம் தாண்டிய மதமே முக்கியம் என்பதை சர்ச்சைக்குள் சிக்கிக்கொள்ளாமல் படமாக்கிய துணிச்சலை பாராட்டலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.