ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Sardar Movie Review: தீபாவளி ரிலீஸ்.. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா கார்த்தியின் சர்தார்..?விமர்சனம் இதோ!

Sardar Movie Review: தீபாவளி ரிலீஸ்.. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா கார்த்தியின் சர்தார்..?விமர்சனம் இதோ!

சர்தார்

சர்தார்

Sardar Movie Review: கார்த்தியுடன், லைலா, ராஷி கண்ணா, ரெஜிஷா விஜயன், ராமதாஸ், சிறுவன் ரித்விக் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சர்தார் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படம் சொல்லும் கருத்து என்ன என்பதை பார்க்கலாம்.

இரும்புத்திரை படத்தில் டிஜிட்டல் மோசடி குறித்து படமாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்திய பி.எஸ்.மித்ரன், சர்தார் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கார்த்தியுடன், லைலா, ராஷி கண்ணா, ரெஜிஷா விஜயன், ராமதாஸ், சிறுவன் ரித்விக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தண்ணீரை வியாபாரமாக பார்க்காமல், ஆதாரமாக பார்க்க வேண்டும் என்பதை சர்தாரில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

தண்ணீர் முதலாளித்துவ கட்டுப்பாடில் சென்றால் என்னவாகும்? அதனால் ஏற்படக்கூடிய ஆபத்து மற்றும் விளைவுகள் என்னென்ன? பாட்டில் தண்ணீரால் கேன்சர் உள்ளிட்ட கொடூர நோய்கள் உருவாகுமா? இந்த கதைக்கும் இந்திய உளவாளிக்கும் இருக்கும் தொடர்பு என்ன? என்பதை விறு விறுப்பான திரைக்கதையில் கூறியுள்ளார் பி.எஸ்.மித்ரன்.

இந்தப் படத்தில் அப்பா - மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருக்கிறார்.

தேசதுரோகியின் மகன் என்ற பட்டத்துடன் இருக்கும் இன்ஸ்பெக்டர் விஜி, தந்தை போஸை கடுமையாக வெறுக்கிறார். அந்த பெயரை மாற்ற சர்தார் என்ற நபரை தேடி நகர்கிறார். அந்த இடத்தில் படம் வேகமெடுக்கிறது.

முதல் பாதியில் சர்தார் யார்? தண்ணீரால் ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை மிக நேர்த்தியாக படமாக்கியுள்ளார் இயக்குனர். குறிப்பாக, பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவரிக்கும் காட்சிகள் பயத்தை ஏற்படுத்துகின்றன. முதல்பாதி முடிந்தவுடன் இடைவேளையில், பாட்டில் தண்ணீர் குடிப்பவர்களை பார்க்கும் போது படத்தின் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன.

இரண்டாம் பாதியில் போஸ் என்ற நாடக கலைஞன், சர்தார் என்ற மிகச்சிறந்த உளவாளியாக எப்படி மாறினான். அவனுக்கும், நாட்டுக்கும் நடந்த சதி ஆகியவை இடம்பெற்றுகிறது. அவை காட்சிகளாக ரசிக்க வைத்தாலும், நீண்ட நேரம் செல்கிறதோ என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது.

Also read... Prince Movie Review: தீபாவளி ரேசில் ஜெயித்ததா பிரின்ஸ்.. சிவகார்த்திகேயன் ஃபார்முலா வெற்றியா, படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்!

இரும்புத்திரை போலவே இந்தப் படத்திலும் ஏராளமான Detailing காட்சிகள் உள்ளன. அதற்காக பி.எஸ்.மித்ரன் மிகவும் மெனக்கெட்டுள்ளார். அதற்கு பலன் திரையில் தெரிகின்றன. மேலும் இந்த கதையை சொல்லும்போது ஆவணப்படமாகிவிட கூடாது என்பதிலும் படக்குழுவினர் கவனம் செலுத்தியுள்ளனர்.

இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி சர்தார் மற்றும் விஜி கதாபாத்திரங்களுக்கு இரண்டு வித்யாசமான உடல்மொழியை காட்டியுள்ளார். அது சண்டைக்காட்சிகளில் கூட வெளிப்பட்டுள்ளது. அதேபோல் ராஷிகண்ணா, லைலா, ரெஜிஷா விஜயன், ராமதாஸ் ஆகியோரும் தங்கள் பணியை நிறைவாக செய்துள்ளனர். இவர்களை தவிர, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிபதிவு, ஜி.வி.பிரகாஷ்குமார் இசை, ரூபனின் படத்தொகுப்பு என அனைத்தும் இயக்குனரின் சிந்தனைக்கு ஏற்ப பக்க பலமாக அமைந்துள்ளன.

முதல் பாதியில் இருந்த வேகம், விறு விறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை. ஆனால் சொல்ல வேண்டிய விஷயத்தை கச்சிதமாக கூறியுள்ளனர். அதுவும் தண்ணீர் நிறுவனங்களை நேரடியாக விமர்சித்துள்ளனர். இதனால் படம் முடிந்து வெளியே வரும்போது, கேன் மற்றும் பாட்டில் தண்ணீரை இனி வாக்கலாமா என யோசிக்க வைக்கும். படத்தில் சில குறைகள் இருந்தாலும் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அவற்றை மறக்கடிக்கிறது. கைதி தீபாவளியை போல சர்தார் தீபாவளியும் கார்த்திக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Karthi, Movie review