அமேசான் ப்ரைம் வலைத்தளத்தில் வெளியாகி உள்ள சாணி காகிதம் திரைப்படம் எப்படி உள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.
கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள சாணி காகிதம் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ராக்கி திரைப்படத்தை தொடர்ந்து அதே பாணியில் மீண்டும் ஒரு பழிவாங்கும் கதையை
அருண் மாதேஸ்வரன் கையில் எடுத்துள்ள இந்த திரைப்படம், அமைதியான வாழ்க்கையில் இருக்கும் இருவர் வாழ்க்கைமுறையை குறிப்பிட்ட நபர்கள் சிதைக்க அதற்கு இருவரும் பழிவாங்கும் கதையை பேசியுள்ளது.
இதையும் படிங்க.. அஜித்தின் வான்மதி உருவாக காரணமாக இருந்த மதுமதி!
பொன்னி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேசும் சங்கையா கதாபாத்திரத்தில் செல்வராகவனும் இந்த திரைப்படத்தில் தங்களது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தேசிய விருது வென்ற நடிகை என்ற சிறப்பை பெற்ற கீர்த்தி சுரேஷ் நடிப்புக்கு தீனி போடும் வகையில் இந்த திரைப்படம் அமைந்துள்ளது. ஒளிப்பதிவு இசை என தொழில்நுட்பத்தில் கவனம் ஈர்க்கும் இந்த திரைப்படம் படம் முழுக்க ரத்தம் சொட்ட சொட்ட உருவாகியுள்ளதால் இளகிய மனம் படைத்தவர்கள் பார்க்க முடியாத ஒரு திரைப்படமாக மாறியுள்ளது. படம் முழுக்க பக்கெட் பக்கெட் ஆக ரத்தம் கொட்டப்பட்டு இருப்பதால் ஓடிடியில் படத்தை பார்த்து முடித்தாலும் கூட பார்த்து முடித்த பின்னரும் போனை பிடித்திருந்த கைகளில் கைகளில் ரத்தக்கரை இருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.
ராக்கி திரைப்படத்தில் பழிவாங்கும் கதையின் மூலம் கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் தொடர்ந்து பழிவாங்கும் கதைகளையே ரத்தம் சொட்ட சொட்ட எடுப்பேன் என சொல்லும் விதமாக திரைப்படத்தையும் உருவாகியுள்ளரா என கேள்வி எழுகிறது. படம் தொழில்நுட்ப ரீதியில் உலக தரத்தில் இருப்பதாக கொண்டாடப்பட்டாலும் இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் உருவாகி உள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
இதையும் படிங்க.. கடைசியில இப்படி ஆயிடுச்சு.. ரசிகர்களை ஏமாற்றிய பிரியங்கா - ராஜூ!
வன்முறை காட்சிகளை இன்னும் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் அருண் மாதேஸ்வரன் எதிர்வரும் காலங்களில் நல்ல திரைப்படங்களை இயக்கும் இயக்குனராக தமிழ் சினிமாவில் உலா வருவார் என்பதில் சந்தேகமில்லை
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.