முடிவுபெற்ற ‘ரத்த சரித்திரம்’... Rambo: Last Blood திரை விமர்சனம்!

வழக்கமான வன்முறைக் காட்சிகள் இம்முறை இன்னும் அதீத வன்முறையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

முடிவுபெற்ற ‘ரத்த சரித்திரம்’... Rambo: Last Blood திரை விமர்சனம்!
ராம்போ லாஸ்ட் ப்ளட்
  • News18
  • Last Updated: September 23, 2019, 10:08 PM IST
  • Share this:
வழக்கமான வன்முறை நிறைந்த சாகச திரைப்படமாகவே Rmbo: Last Blood திரைப்படமும் வெளியாகி உள்ளது.

1982-ம் ஆண்டு ராம்போ சீரிஸின் முதல் பாகம் வெளியானது. 37 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ராம்போ- லாஸ்ட் ப்ளட் திரைப்படம் இறுதி பாகமாக வெளியாகி உள்ளது. திரையில் மீண்டும் சில்வஸ்டர் ஸ்டாலோனைப் பார்ப்பதற்கென்றே திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன. ரசிகர்களை சற்றும் ஏமாற்றாமல் மீண்டும் அதே கர்ஜனையோடு நிறைவு பெற்றுள்ளார் ஸ்டாலோன்.

போரும் சண்டையும் என்றே வாழ்க்கையைக் கழித்த ஜான் ராம்போ அதனது எதிர்மறை தாக்கத்தால் மன ரீதியான சவால்களைச் சந்தித்து வருகிறார். ஓய்வுக் காலத்தில் குடும்ப நண்பரது வீட்டில் பாட்டி- பேத்தி உறவுகள் உடன் ஜான் ராம்போவும் இணைந்து அமைதியான ஒரு கிராம வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.


மறைந்த தோழியின் அம்மா மற்றும் மகளுக்கு ஒரு பாதுகாவலராக வாழும் ஜான் ராம்போவின் வாழ்வில் டீன் ஏஜ் வளர்ப்பு மகளால் பல சவால்களைச் சந்திக்கிறார். வளர்ப்பு மகள் போதைப் பொருள் கும்பலால் கடத்தப்பட அவரைத் தேடும் படலத்தில் தோற்கிறார். அந்தத் தோல்விக்கும் இழப்புக்கும் சேர்த்து ஜான் ராம்போ எடுக்கும் பழிவாங்கும் படுகொலைப் படலம்தான் Rambo: Last Blood.

வழக்கமான வன்முறைக் காட்சிகள் இம்முறை இன்னும் அதீத வன்முறையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதை நாஸ்டால்ஜியா உணர்வை விரும்பி செல்லும் ரசிகர்கள் ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பு: மனம் பலவீனமானவர்கள் Rambo: Last Blood பார்க்கும் முடிவை மறுபரிசீலனை செய்துகொள்ளுங்கள்.மேலும் பார்க்க: வசூல் சாதனை செய்தாலும் கதையில் ஈர்ப்பில்லை... ’ட்ரீம் கேர்ள்’ திரை விமர்சனம்

சக்தே இந்தியாவின் காப்பியா பிகில்?
First published: September 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading