‘எதிரியை சூழ்ச்சி பண்ணி வீழ்த்துறது தப்பே இல்ல’ - 'பேட்ட' படத்திலும் அரசியல் பேசிய ரஜினிகாந்த்

சண்டைக் காட்சிகளுடன் ஆரம்பமாகும் பேட்ட படத்தில் “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்று படத்தின் முதல் வசனத்தை பேசியுள்ளார் ரஜினிகாந்த். #PettaReview

Sheik Hanifah | news18
Updated: January 11, 2019, 2:44 PM IST
‘எதிரியை சூழ்ச்சி பண்ணி வீழ்த்துறது தப்பே இல்ல’ - 'பேட்ட' படத்திலும் அரசியல் பேசிய ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Sheik Hanifah | news18
Updated: January 11, 2019, 2:44 PM IST
பேட்ட படத்தில் ரஜினிகாந்த் பேசும் அரசியல் வசனங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்று வெளியான இந்தப் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடைசியாக பா.ரஞ்சித் இயக்கத்தில் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்திருந்த ரஜினிகாந்த், அதில் அரசியல் வசனங்களை பேசியிருப்பார். பேட்ட படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதால் அரசியல் திரைப்படமாக இருக்காது என்று பலர் எண்ணிய நிலையில் திரைப்பட துவக்கமே அரசியல் வசனங்களுடன் தான் தொடங்குகிறது.

சண்டைக் காட்சிகளுடன் ஆரம்பமாகும் பேட்ட படத்தில் “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்று படத்தின் முதல் வசனத்தை பேசியுள்ளார் ரஜினிகாந்த். இந்த வசனம் அவர் மீது வைக்கப்படும் அரசியல் விமர்சனங்களுக்கு பதில் கூறும் விதமாக அமைந்துள்ளது.

மற்றொரு இடத்தில் “நான் நல்லவன் தான் ஆனா ரொம்ப நல்லவன் கிடையாது” என்று ரஜினிகாந்த் பேசும் வசனத்துக்கு திரையரங்கம் கரவொலியால் அதிர்ந்தது. “என் மண்ணையும் மக்களையும் சொறண்டி தின்னவனுங்களுக்கு இது தான்டா முடிவு. நம்ப பக்கம் நியாயமும் தர்மமும் இருந்தா எதிரியை சூழ்ச்சி பண்ணி வீழ்த்துறது தப்பே இல்ல” என்ற ரஜினிகாந்த் பேசும் வசனங்களும் அரசியல் வசனங்களாகவே அமைந்துள்ளன.

ரஜினிகாந்தின் பெரும்பாலான படங்களில் அவர் பேசும் பஞ்ச் வசனங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

VIDEO: மாலை போடும் போது சரிந்து விழுந்த விஸ்வாசம் பேனர் - 6 பேர் காயம்

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...